வருடந்தோறும் பொங்கல் பண்டிகையையொட்டி தமிழக அரசால் பொங்கல் பரிசு வழங்கப்படுவது வழக்கம். அந்தவகையில் வரும் பெண்களுக்காக பொங்கல் பரிசு வழங்கும் பணியை அரசு இப்போதே தொடங்கிவிட்டது. அதன்படி இன்னும் 4 நாள்களில் ரேஷன் கடைகல் மூலம் இலவச வேட்டி, சேலை விநியோகம் தொடங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த திட்டத்தை CM ஸ்டாலின் தொடங்கி வைத்த பிறகு, தமிழகம் முழுவதும் உள்ள ரேஷன் கடைகளில் விநியோகம் நடைபெற இருக்கிறது. மேலும், பச்சரிசி, வெல்லம், கரும்பு, பரிசுத் தொகை உள்ளிட்டவை வழங்குவது தொடர்பான அறிவிப்பும் விரைவில் வெளியாகலாம் என்று சொல்லப்படுகிறது.
