தமிழக மக்களே ரெடியா?… பொங்கல் பரிசு… இன்னும் 2 நாட்களில்…. வந்தாச்சு சூப்பர் குட் நியூஸ்..!

By Nanthini on தை 4, 2026

Spread the love

தமிழகத்தில் வெகு விமர்சையாக கொண்டாடப்படும் பொங்கல் பண்டிகையை அனைத்து தரப்பு மக்களும் மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் சிறப்பு பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகின்றது. ஒவ்வொரு வருடமும் ரொக்க பணமும் வழங்கப்படும் நிலையில் கடந்த 2025 ஆம் ஆண்டு நிதி நெருக்கடி காரணமாக ரொக்கம் வழங்கப்படவில்லை. இதனிடையே 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்கமும் வழங்கப்படும் என எதிர்பார்க்கப்பட்டது. ஆனால் மக்களுக்கு ஏமாற்றம் அளிக்கும் விதமாக ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு முழு கரும்பு 2.22 கோடி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என அரசு அறிவித்தது.

இந்நிலையில் பொங்கல் பரிசுக்கு பணம் வழங்குவது தொடர்பான அறிவிப்பை முதல்வர் ஸ்டாலின் வெளியிடுவார் என அமைச்சர் பெரியகருப்பன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் அதற்கான டோக்கன்கள் அனைத்து மாவட்டங்களுக்கும் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். 2 நாள்களுக்குள் மக்களுக்கு டோக்கன் வழங்கப்பட உள்ளது. ஜன.8-ல் பொங்கல் தொகுப்பு திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடங்கி வைக்க உள்ளதாக கூறப்படுகிறது.