அனைத்து ரேஷன் அட்டைக்கும் பொங்கல் பரிசுடன் ரூ.5000… சற்றுமுன் எடப்பாடி பழனிச்சாமி அதிரடி…!

By Nanthini on மார்கழி 22, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் அனைத்து அரசியல் கட்சிகளும் தீவிரமாக தேர்தல் பணியில் ஈடுபட்டு வருகின்றன. குறிப்பாக பாஜக உடன் கூட்டணி வைத்துள்ள அதிமுக இந்த தேர்தலில் எப்படியாவது வெற்றி பெற வேண்டும் என்ற நோக்கத்தில் செயல்பட்டு வருகிறது. அதேசமயம் விஜய் கட்சி தொடங்கியதிலிருந்து அதிமுக மற்றும் பாஜக உள்ளிட்ட கட்சிகள் தொடர்ந்து அழைப்பு விடுத்து வருகின்றன. ஆனால் இதுவரை விஜய் சார்பில் கூட்டணி குறித்து அறிவிப்பு வெளியிடப்படவில்லை.

இதனிடையே அதிமுக மற்றும் தமிழக வெற்றி கழகம் ஆகிய கட்சிகள் தொடர்ந்து திமுகவை எதிர்த்து வருகின்றன. குறிப்பாக இபிஎஸ் திமுகவை வீழ்த்தி இந்த முறை ஆட்சியை பிடிக்க வேண்டும் என்பதில் உறுதியாக உள்ளார். இதனால் தொடர்ந்து அனைத்து தேர்தல் பிரச்சாரங்களிலும் திமுகவை இபிஎஸ் விமர்சனம் செய்து வருகிறார். இப்படியான நிலையில் தற்போது பொங்கல் பண்டிகை நெருங்கிக் கொண்டிருப்பதால் பொதுமக்களுக்கு ரொக்க பரிசு வழங்க வேண்டும் என தொடர்ந்து அனைத்து கட்சிகளும் குரல் எழுப்பி வருகின்றன.

   

இந்நிலையில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி பொங்கல் பரிசு குறித்து செய்தியாளர்களிடம் பேசினார். அப்போது, தமிழகத்தில் விரைவில் பொங்கல் திருநாள் வர உள்ளது. எனவே பொங்கல் பரிசு தொகுப்புடன் சேர்த்து ஒவ்வொரு குடும்ப அட்டைதாரர்களுக்கும் ஐந்தாயிரம் ரூபாய் வழங்க வேண்டும் என கோரிக்கை வைத்துள்ளார். மேலும் திமுக அரசு பொறுப்பேற்ற நாள் முதல் எந்த ஒரு திட்டத்தையும் முழுமையாக நிறைவேற்றவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.