தமிழகத்தில் ஒவ்வொரு வருடமும் மக்கள் அனைவரும் பொங்கல் பண்டிகையை மகிழ்ச்சியாக கொண்டாடும் வகையில் அரசு சார்பில் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்படுகிறது. அதேசமயம் கடந்த இரண்டு வருடங்களாக பொங்கல் பரிசு தொகுப்புடன் ரொக்க பணமும் ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்பட்டு வந்தது. ஆனால் 2025 ஆம் ஆண்டில் பொங்கல் பண்டிகையின் போது ரொக்க பணம் எதுவும் வழங்கப்படவில்லை. நிதி பற்றாக்குறை காரணமாக பொங்கல் பரிசு தொகுப்பு மட்டுமே வழங்கப்பட்டது. இப்படியான நிலையில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்குவதால் 2026 ஆம் ஆண்டு பொங்கல் பண்டிகையில் ரொக்க பணம் வழங்க அரசு திட்டமிட்டுள்ளதாக சமீப காலமாகவே செய்திகள் வெளிவந்த வண்ணம் உள்ளது.
இந்நிலையில் கடந்த ஆண்டு போலவே பொங்கல் தொகுப்பு ஜனவரி ஒன்பதாம் தேதி வழங்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாக சமீபத்தில் செய்திகள் வெளியாகி இருந்தது. தற்போது இரண்டு நாட்களுக்கு முன்னதாகவே அதாவது ஜனவரி 7 ஆம் தேதி குடும்ப அட்டைதாரர்களுக்கு ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை, ஒரு முழு கரும்பு அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு நியாய விலை கடைகள் மூலம் விநியோகம் செய்யப்பட உள்ளதாக புதிய தகவல்களியாகி உள்ளது.
