நிதி நெருக்கடியில் தமிழக அரசு… பொங்கல் பரிசு ரூ.3,000 வழங்கப்படுமா..? கசிந்த முக்கியத் தகவல்.

By Soundarya on தை 2, 2026

Spread the love
தமிழகத்தில் 2.22 கோடி குடும்ப அட்டைதாரர்களுக்குப் பொங்கல் பரிசுத் தொகுப்பு வழங்க ரூ.248 கோடி ஒதுக்கப்பட்ட பின்னரும், ரொக்கப் பரிசு அறிவிப்பு தள்ளிப்போவதற்கான முக்கிய காரணங்கள் தற்போது வெளியாகியுள்ளன. தலா ரூ.3,000 ரொக்கம் வழங்கினால் அரசுக்கு சுமார் ரூ.6,500 கோடி கூடுதல் நிதி தேவைப்படும். ஏற்கனவே கலைஞர் மகளிர் உரிமைத் திட்டத்திற்காக மாதம் ரூ.1,300 கோடி செலவிடப்பட்டு வரும் நிலையில், இந்த கூடுதல் நிதிச்சுமையைச் சமாளிப்பது குறித்து நிதித்துறை தீவிரமாக ஆலோசித்து வருகிறது.
தமிழக அரசு 2026 பட்ஜெட் மற்றும் இதர வளர்ச்சித் திட்டங்களைக் கருத்தில் கொண்டு, நிதி மேலாண்மையில் சமநிலையைப் பேண முயற்சிப்பதால் இந்தத் தாமதம் ஏற்பட்டுள்ளதாக அரசு வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இருப்பினும், பொதுமக்களின் எதிர்பார்ப்பைப் பூர்த்தி செய்யும் வகையில் தகுந்த தொகையை அறிவிக்க முதல்வர் மு.க. ஸ்டாலின் ஆலோசனைகளை மேற்கொண்டு வருகிறார். பொங்கல் பண்டிகைக்கு இன்னும் சில நாட்களே உள்ள நிலையில், நிதி நிலைமையை ஆய்வு செய்து இறுதி முடிவு இன்று வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.