பொங்கல் பண்டிகைக்கு இந்த வருடம் ரேஷன் கடைகளில் ஒரு கிலோ பச்சரிசி, ஒரு கிலோ சர்க்கரை மற்றும் ஒரு கிலோ கரும்பு வழங்கப்படும் என தமிழக அரசு ஏற்கனவே அறிவித்திருந்தது. அதற்கான பொருட்களை கொள்முதல் செய்வதற்காக 248 கோடி நிதியையும் ஒதுக்கியிருந்தது. இந்நிலையில் சட்டசபை தேர்தலை முன்னிட்டு வருகின்ற பொங்கல் பண்டிகை இது என்பதால் ரொக்க பணம் வழங்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மக்கள் மத்தியில் இருந்தது. அதனை நிறைவேற்றும் விதமாக முதல்வர் ஸ்டாலின் அதற்கான அறிவிப்பை நேற்று வெளியிட்டார். அதன்படி ரேஷன் அட்டைதாரர்களுக்கு பொங்கல் தொகுப்புடன் இலவச வேட்டி சேலை மற்றும் மூவாயிரம் ரூபாய் ரொக்கம் வழங்கப்படும் என அறிவித்தார்.
இதனைத் தொடர்ந்து ஜனவரி 8 ஆம் தேதி பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கும் திட்டத்தை முதல்வர் தொடங்கி வைக்கின்றார். அன்றைய தினம் முதல் வருகின்ற ஜனவரி 14-ஆம் தேதி வரை ரேஷன் கடைகளில் ஒவ்வொரு நாளும் சுமார் 400 ரேஷன் கார்டுகளுக்கு பொங்கல் பரிசு வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. டோக்கன் வினியோகமும் நேற்று முதல் தமிழகம் முழுவதும் தொடங்கியுள்ள நிலையில் ரேஷன் கடை ஊழியர்கள் வீடு வீடாக சென்று டோக்கன் விநியோகம் செய்து வருகிறார்கள்.
ராஜஸ்தான் மாநிலம் ஜெய்ப்பூரில் உள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க 'ஜந்தர் மந்தர்' சுற்றுலாத் தலத்திற்குச் சென்ற அமெரிக்க உள்ளடக்க உருவாக்குநர் ஒருவருக்கு,…
தானே நகரின் மக்கள் நடமாட்டம் மிகுந்த தலாவ்பாலி பகுதியில், பொதுமக்களுக்கு இடையூறு விளைவிக்கும் வகையில் பாலியல் தொழிலில் ஈடுபட்டதாகக் கூறப்படும்…
குருகிராமில் 25 வயது இளைஞர் ஒருவர் கொடூரமாகத் தாக்கப்பட்டு, உயிருக்குப் போராடும் நிலையில் அவரது வீட்டு வாசலிலேயே வீசப்பட்ட சம்பவம்…
அமெரிக்காவின் நியூயார்க் நகரிலுள்ள புரூக்ளின் பகுதியில் நிகழ்ந்த கோர விபத்து ஒன்றில், பழமையான மூன்று மாடிக் கட்டிடம் இடிந்து தரைமட்டமானதில்…
சோஹ்ரத்கர் நகரின் 11-வது வார்டுக்கு உட்பட்ட ரகுநாத்நகர் பகுதியில், காஜல் என்ற பெண்ணும் அவரது 18 மாத மகன் டைகரும்…
செயற்கை நுண்ணறிவு சிப் தயாரிப்பில் முன்னணியில் உள்ள என்விடியா நிறுவனத்தை 30 ஆண்டுகளுக்கும் மேலாக வழிநடத்தி உச்சத்திற்குக் கொண்டு சென்ற…