பொங்கல் பரிசுத்தொகை.. ரேஷன் அட்டைதாரர்களுக்கு வந்தது இனிப்பான செய்தி…!!

By Soundarya on மார்கழி 25, 2025

Spread the love

கடந்த 2021 தேர்தலின் போது அப்போதைய அதிமுக அரசு ரூ.2,500 வழங்கியது. அதனை விஞ்சும் வகையில், இந்த முறை குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ.3,000 ரொக்கப்பணம் வழங்க திமுக அரசு திட்டமிட்டு வருவதாகக் கூறப்படுகிறது. 2026 சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு இந்த அதிரடி அறிவிப்பு வெளியாக வாய்ப்புள்ளது.

இந்தப் பொங்கல் பரிசுத் திட்டம் குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்கள் 2026 புத்தாண்டு தினத்தன்று வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. அறிவிப்பு வெளியானதைத் தொடர்ந்து, ஜனவரி முதல் வாரத்திலேயே ரேஷன் கடைகள் மூலம் பயனாளர்களுக்கு டோக்கன் விநியோகம் செய்யும் பணி தொடங்கும் எனத் தெரிகிறது. இதன் மூலம் பொங்கலுக்கு முன்னதாகவே அனைவரும் பரிசுத் தொகையைப் பெறுவது உறுதி செய்யப்படும்.