BREAKING: கனமழை எதிரொலி… முதல் மாவட்டமாக இன்று பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிப்பு…!

By Nanthini on தை 13, 2026

Spread the love

தமிழகத்தில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வரும் நிலையில் இன்று ஒரு சில மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் தொடர் கனமழை காரணமாக புதுச்சேரியின் காரைக்கால் மாவட்டத்தில் உள்ள பள்ளிகளுக்கு ஜனவரி 13 இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. தமிழகத்தின் கடலோர மாவட்டங்களான தஞ்சை, மயிலாடுதுறை, நாகை மற்றும் புதுக்கோட்டை உள்ளிட்ட மாவட்டங்களில் நள்ளிரவு முதல் பரவலாக மழை பெய்து வருவதால் அந்த மாவட்டங்களிலும் பள்ளிகளுக்கு விடுமுறை குறித்து அறிவிப்பு வெளியாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.