“ஒரே அசிங்கமா போச்சு குமாரு”…. “ஏப்ரல் 23 இல்ல 24…” – மேடையிலேயே உளறிய விஜய் கட்சி வேட்பாளர்… தளபதியே ஷாக் ஆகிட்டாரு…!

Spread the love

தமிழக சட்டசபை தேர்தலில் நடிகர் விஜய்யின் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து களம் காண்கிறது. கட்சித் தலைவர் விஜய் சென்னை பெரம்பூர் மற்றும் திருச்சி கிழக்கு ஆகிய இரண்டு தொகுதிகளில் போட்டியிட, மற்ற தொகுதிகளிலும் இளம் வேட்பாளர்கள் தீவிரமாகச் சுழன்று வருகின்றனர். அந்த வகையில், திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தொகுதியில் தவெக சார்பில் 30 வயதான எம்பிஏ பட்டதாரி அபிஷேக் வேட்பாளராகக் களமிறக்கப்பட்டுள்ளார். செங்கல்பட்டு மாவட்ட இளைஞரணி தலைவரான இவர், தற்போது போளூர் தொகுதியில் தங்கி தீவிர வாக்குச் சேகரிப்பில் ஈடுபட்டு வருகிறார்.

சமீபத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த அபிஷேக், தொகுதியின் மேம்பாட்டிற்காகவே தான் இங்கு வந்துள்ளதாகக் கூறினார். பிரசாரத்தின் போது உற்சாகமாகப் பேசிய அவர், “விஜய் சொல்வது போல் போட்டி என்னவோ திமுகவிற்கும் தவெகவிற்கும் தான். களத்தில் மற்ற கட்சிகள் இல்லை, நாங்கள் ஏற்கனவே வெற்றி பெற்றுவிட்டோம்,” என்று நம்பிக்கையோடு குறிப்பிட்டார். ஆனால், பேச்சின் ஓட்டத்தில் தமிழக சட்டசபை தேர்தல் நடைபெறும் உண்மையான தேதியை மறந்து, தவறான தேதியைக் குறிப்பிட்டது அங்கிருந்தவர்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது.

தமிழக சட்டசபை தேர்தல் ஏப்ரல் 23ஆம் தேதி நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ள நிலையில், அபிஷேக் தனது பேட்டியில் “ஏப்ரல் 24ஆம் தேதி மக்கள் சரியாக வாக்களித்து வெற்றியை உறுதி செய்ய வேண்டும்” என்று தவறாகக் கூறினார். வேட்பாளராக இருக்கும் ஒருவரே தேர்தல் தேதியை மாற்றிச் சொன்ன வீடியோ தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி விவாதங்களை உருவாக்கியுள்ளது. மேலும், அவர் செங்கல்பட்டைச் சேர்ந்தவர் என்பதால் ‘சொந்த ஊர்’ குறித்த கேள்விக்கு, தனது தாயாரின் ஊர் திருவண்ணாமலை தான் என்றும், தன்னை அந்நியராகப் பார்க்க வேண்டாம் என்றும் அவர் விளக்கம் அளித்தார்.

கடந்த 2021 தேர்தலில் அதிமுகவின் அக்ரி கிருஷ்ணமூர்த்தி வெற்றி பெற்ற இந்த போளூர் தொகுதியில், இம்முறை மும்முனைப் போட்டி நிலவுகிறது. தேமுதிக, பாமக, நாம் தமிழர் கட்சி வேட்பாளர்களுடன் தவெகவின் அபிஷேக் மோதும் நிலையில், தேர்தல் தேதியில் அவர் செய்த குளறுபடி அரசியல் களத்தில் பேசுபொருளாகியுள்ளது. ஒருபுறம் விஜய் தனது வேட்புமனுக்களில் வயது தொடர்பாகச் செய்த குளறுபடிகள் சர்ச்சையான நிலையில், மறுபுறம் அவரது வேட்பாளர் தேர்தல் தேதியையே மாற்றிச் சொன்னது அக்கட்சியினரிடையே தர்மசங்கடத்தை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இந்த பூனைக்குட்டிக்கு உங்க பூனையே தந்தை” நீங்க தான் வளர்க்கணும்… பக்கத்துக்கு வீட்டாரின் வாக்குவாதத்தால் போலீஸ் ஸ்டேஷன் வரை சென்ற பஞ்சாயத்து…!!

பெங்களூரு பகுதியில் செல்லப் பிராணிகளால் அண்டை வீட்டாருக்கு இடையே ஏற்பட்ட விசித்திரமான மோதல், காவல்துறையினரின் தலையீட்டால் ஒருவழியாகச் சமாதானத்தில் முடிந்தது.…

45 seconds ago

சீனாவிடம் இருந்து சாட்டிலைட்டை விலைக்கு வாங்கிய ஈரான்… விண்ணில் இருந்து அமெரிக்கத் தளங்களைத் தூக்கியடித்த ‘மாஸ்டர் பிளான்’… அதிர வைக்கும் உளவுத் தகவல்கள்…!!!

சமீபத்திய ஈரான்-அமெரிக்கா மோதலின் பின்னணியில், வளைகுடா நாடுகளில் உள்ள அமெரிக்க ராணுவ நிலைகளைக் கண்காணிக்க ஈரான் சீனத் தயாரிப்பு செயற்கைக்கோளைப்…

4 minutes ago

மாறுவேடப் போட்டிக்காக மகன் உடல் முழுவதும் பெயிண்ட் பூசிய தாய்… கடைசியில் காத்திருந்த அதிர்ச்சி… உயிருக்கே ஆபத்து என கண்டிக்கும் நெட்டிசன்கள்..!!

அர்ஜென்டினாவில் பள்ளி மாறுவேடப் போட்டிக்காகத் தனது மகனைத் தயார் செய்த தாயின் விபரீத முடிவு பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. போட்டியில்…

8 minutes ago

பகீர்..! கிரிக்கெட் மேட்ச் முடிந்த சில மணி நேரங்களில்.. மகளைக் கொன்று தாயும் தற்கொலை.. நடந்தது என்ன..? வெளியான பகீர் பின்னணி..!!

பெங்களூரு பகுதியில் 45 வயது மதிக்கத்தக்க சுவர்ணா என்ற தாய், தனது 13 வயது மகளைக் கொலை செய்துவிட்டுத் தானும்…

12 minutes ago

பகீர்!.. வாக்கு கேட்ட தவெக பெண் நிர்வாகியை செருப்பால் அடித்த போதை ஆசாமி… வைரலாக அரைநிர்வாண வீடியோ…!!!

தமிழக சட்டமன்றத் தேர்தலில் முதன்முறையாகக் களம் கண்டுள்ள தமிழக வெற்றிக் கழகம், தீவிரத் தேர்தல் பரப்புரையில் ஈடுபட்டுள்ளது. அக்கட்சியின் தலைவர்…

21 minutes ago

அடுத்த பரபரப்பு..! மனைவி சொத்து விவரங்களை மறைத்தார் ஆதவ் அர்ஜுனா..? வேட்புமனுவை ரத்து செய்யக்கோரி சுயேச்சை வேட்பாளர் மனு..1!

வில்லிவாக்கம் தொகுதி தமிழக வெற்றிக் கழக வேட்பாளர் ஆதவ் அர்ஜுனா, தனது வேட்புமனுவில் மனைவியின் சொத்து விவரங்களை மறைத்துள்ளதாகக் கூறி…

27 minutes ago