BREAKING: பொள்ளாச்சி ஜெயராமன் வீட்டில் நடந்த சோகம்…. கலங்கிப்போன அதிமுக தொண்டர்கள்….!

By Nanthini on வைகாசி 15, 2026

Spread the love

அதிமுகவின் மூத்த தலைவர்களில் ஒருவரும், முன்னாள் அமைச்சருமான பொள்ளாச்சி ஜெயராமனின் தாயார் சரஸ்வதி அம்மாள் (94) வயது மூப்பு மற்றும் உடல்நலக்குறைவு காரணமாகப் பொள்ளாச்சியில் காலமானார். இச்செய்தியை அறிந்து மிகுந்த வேதனை அடைந்ததாக அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளார்.

தனது பாசமிகு தாயாரை இழந்து வாடும் பொள்ளாச்சி ஜெயராமனுக்கும், அவரது குடும்பத்தினருக்கும் ஆறுதல் கூறியுள்ள அவர், அன்னாரின் ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனைப் பிரார்த்திப்பதாக உருக்கத்துடன் குறிப்பிட்டுள்ளார். அரசியல் கட்சிப் பிரமுகர்கள் மற்றும் உள்ளூர் முக்கியஸ்தர்கள் பலரும் சரஸ்வதி அம்மாளின் மறைவுக்குத் தொடர்ந்து தங்களது இரங்கல்களைத் தெரிவித்து வருகின்றனர்.