தமிழகத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் நெருங்க நெருங்க தேர்தல் களமும் நாளுக்கு நாள் சூடு பிடித்துக் கொண்டே வருகிறது. என்னதான் கூட்டணி பலமாக இருந்தாலும் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியில் அனைத்து கட்சியினரும் தீவிரம் காட்டி வருகின்றனர். குறிப்பாக திமுக ஓரணியில் தமிழ்நாடு என்ற உறுப்பினர் சேர்க்கையில் மாற்றுக் கட்சியினரை தங்கள் கட்சியில் இணைக்கும் பணியை தீவிர படுத்தியுள்ளது. கடந்த சில நாட்களாகவே தொடர்ந்து முக்கிய நிர்வாகிகள் பலரும் திமுகவில் இணைந்த வண்ணம் உள்ளனர்.
இந்நிலையில் அதிமுக முன்னாள் அமைச்சர் பொள்ளாச்சி ஜெயராமன் திமுகவில் இணைந்து விட்டதாக செய்தி பரப்பி வருகிறது. அது குறித்து விளக்கம் அளித்த அவர், அதிமுக தனது உயிரோடு கலந்தது என்றும் இப்படியான வதந்திகளை யாரும் பரப்ப வேண்டாம் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் உயிர் மூச்சு இருக்கும் வரை இபிஎஸ்ஐ பின்பற்றி செயலாற்றுவேன் என குறிப்பிட்ட ஜெயராமன், அதிமுகவில் இணைய ஸ்டாலின் மனு கொடுத்தால் பரிசீலிக்கப்படும் என நையாண்டியாக கூறியுள்ளார்.
