தமிழகத்தில் த.வெ.க தலைவர் விஜய் முதலமைச்சராகப் பதவியேற்று 75 நாட்கள் நிறைவடைந்துள்ள நிலையில், அதிமுக மற்றும் த.வெ.க இடையே அரசியல் ரீதியிலான வார்த்தை மோதல்கள் தீவிரமடைந்துள்ளன. மதுரையில் செய்தியாளர்களைச் சந்தித்த அதிமுக முன்னாள் அமைச்சர் ஆர்.பி. உதயகுமார், முதல்வர் விஜய் கடந்த 75 நாட்களில் உருப்படியாக எதுவும் செய்யவில்லை என்று சாடினார். செய்யாத திட்டங்களையும் செய்ததாகக் காட்டி, பல்வேறு மொழிகளில் சமூக ஊடக இன்ஃப்ளூயன்சர்களைக் கொண்டு போலியான ‘ரீல்ஸ்’ வீடியோக்கள் மூலம் ஒரு மாய பிம்பத்தை த.வெ.க அரசு கட்டமைத்து வருவதாக அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.
மேலும், இந்த மாய பிம்பத்தை மூலதனமாகக் கொண்டு, வரும் 2029ஆம் ஆண்டு நடைபெறவுள்ள நாடாளுமன்றத் தேர்தலில் முதல்வர் விஜய்யை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்துவதற்கான திரைமறைவு வேலைகள் நடந்து வருவதாக ஆர்.பி.உதயகுமார் பரபரப்பு குற்றச்சாட்டை முன்வைத்துள்ளார். இது குறித்து டெல்லியில் உள்ள மத்திய தலைவர்கள் இப்போதே விழித்துக் கொள்ள வேண்டும் என்றும் அவர் எச்சரித்துள்ளார். தற்போதைய த.வெ.க ஆட்சியில் எங்கு பார்த்தாலும் ரீல்ஸ் எடுப்பதற்காக ‘ஆய்வு’ என்ற பெயரில் கூத்துகள் நடப்பதாகவும், இதனால் தலைநிமிர்ந்த தமிழகம் தற்போது தலைதாழ்ந்து நிற்பதாகவும் அவர் வேதனை தெரிவித்துள்ளார்.
குறிப்பாக, த.வெ.க-வின் ‘மைக் டைசன்’ என்று வர்ணிக்கப்படும் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ராஜ்மோகன் மீது அவர் கடுமையான சட்ட மீறல் புகார்களை அடுக்கினார். தடைசெய்யப்பட்ட கீழடி அகழ்வாராய்ச்சிப் பகுதியில் எந்தவித முறையான அனுமதியும் இன்றி ட்ரோன் கேமராக்கள் மூலம் த.வெ.க-வினர் ரீல்ஸ் வீடியோ எடுத்ததை அமைச்சர் தடுத்து நிறுத்தவில்லை என்று சாடினார். பள்ளிகளில் ரீல்ஸ் எடுக்கக் கூடாது என அரசாணை பிறப்பித்த அமைச்சரே சட்டத்தை மீறுவதாகவும், வகுப்பறைகளுக்குள் புகுந்து முதல்வர் விஜய்யின் படங்களை வைத்து அட்ராசிட்டி செய்வதாகவும் குற்றம் சாட்டினார். போதைப்பொருள் சர்ச்சை, பழனி தேவஸ்தான நில விவகாரம் என த.வெ.க அரசு தொடர்ந்து சர்ச்சைகளின் பிடியிலேயே சிக்கியுள்ளதாக ஆர்.பி.உதயகுமார் சாடியுள்ளார்.
கோலாப்பூர் – இச்சல்கரஞ்சி-கப்னூர் வழித்தடத்தில் உள்ள கப்னூர் சௌக் பகுதியில் அதிவேகமாக வந்த டாடா பஞ்ச் கார், முன்னால் சென்று…
உணவகத்தின் கலகலப்பான சத்தங்களுக்கு நடுவே, மேஜையின் நடுவில் வைக்கப்பட்டிருந்த ஹாட் பாட் பாத்திரம் மெல்லிய புகையுடன் கொதித்துக் கொண்டிருந்தது. தட்டிலிருந்த…
தலைநகர் டெல்லி மயூர் விஹார் பகுதியில் உள்ள தனியார் பள்ளியில் 3-ஆம் வகுப்பு படித்து வந்த 9 வயது சிறுமி…
கேரளாவில் வெளிநாட்டிலிருந்து சட்டவிரோதமாகக் கடத்தி வரப்பட்ட பல லட்சம் ரூபாய் மதிப்புள்ள தங்கத்தைக் கவர்ந்து செல்ல, பெண் ஒருவர் திரைப்பட…
உத்தரப் பிரதேச மாநிலம் புதௌன் மாவட்டத்தைச் சேர்ந்த கருலியா கிராமத்தைச் சேர்ந்தவர் ஏக்தா. ஏழு மாதக் கர்ப்பிணியாக இருந்த இவருக்குச்…
உத்தரப் பிரதேச மாநிலத்தில் 11-ஆம் வகுப்பு படித்துக் கொண்டிருந்த போதே காதலிப்பதாகக் கூறி, 10 ஆண்டுகள் அத்துமீறலில் ஈடுபட்டு ஏமாற்றிய…