Categories: அரசியல்

“நான் எப்போதுமே திமுகவின் கட்டப்பா…” நண்பா, நண்பீஸ் என்ற கவர்ச்சி முழக்கம்…! தவெக விஜய் அரசை மேடையிலேயே வெளுத்து வாங்கிய சத்யராஜின் அதிரடி விமர்சனம்…!!

Spread the love

சென்னை சைதாப்பேட்டையில் நடைபெற்ற கலைஞர் கணினி கல்வியகம் மற்றும் மகளிர் திறன் மேம்பாட்டு மையத்தின் சான்றிதழ் வழங்கும் விழாவில், முன்னாள் அமைச்சர் மா.சுப்பிரமணியனுடன் இணைந்து கலந்து கொண்ட திரையுலகின் முன்னணி மூத்த நடிகர் சத்யராஜ், 250 மாணவிகளுக்குப் பட்டங்களை வழங்கிப் பாராட்டியதோடு மாஸான அரசியல் கருத்துக்களையும் முன்வைத்தார். திராவிட முன்னேற்றக் கழகம் என்பது வெறும் தேர்தல் அரசியலுக்கானது மட்டுமல்ல என்றும், அது சமத்துவம் மற்றும் சமூக நீதிக்காக உருவாக்கப்பட்ட உன்னதமான மக்கள் இயக்கம் என்றும் அவர் புகழாரம் சூட்டினார்.

தற்போதைய ஆட்சிப் பொறுப்பில் யார் இருந்தாலும், கலைஞர் கருணாநிதி மற்றும் மு.க.ஸ்டாலின் ஆகியோர் வகுத்த மக்கள் நலப்பாதையையும், பெரியார்-அம்பேத்கரின் கொள்கைகளையும் பின்பற்றுவது காலத்தின் கட்டாயம் என்று வலியுறுத்திய அவர், ‘திமுகவின் கட்டப்பா’ என்று தம்மைக் கூப்பிட்டாலும் அதில் தமக்கு மட்டற்ற பெருமையே என்று ஆவேசமாக முழங்கினார்.

தொடர்ந்து தற்போதைய தவெக ஆட்சியைத் தக்காளித் தொக்கு ரேஞ்சுக்கு விமர்சித்த சத்யராஜ், “நாம் வாங்கிக் கொடுத்த ஆட்டோக்களில் தற்பொழுது வேறொரு கட்சியின் கொடி பறப்பதாகப் பலரும் புலம்புகிறார்கள், அந்த நிலை எவ்வளவு காலம் நீடிக்கும் என்பதை வரவிருக்கும் காலமே தீர்மானிக்கும்” என்று சூசகமாகக் குறிப்பிட்டார். ‘மாற்றம்’ என்ற கவர்ச்சிகரமான முழக்கத்தை நம்பிப் பொதுமக்கள் அவசரப்பட்டுத் தங்களது வாக்குகளைச் செலுத்திவிட்டதாகக் குமுறிய அவர், குழந்தைகள் மற்றும் இளைஞர்கள் தங்களை நோக்கி ‘நண்பா’, ‘நண்பீஸ்’ என்று கூப்பிட்ட சினிமாத்தனமான வசனங்களை நம்பிப் பெரியவர்கள் ஏமாந்துவிட்டதாகத் தவெக விஜய் அரசை நேரிடையாகச் சாடினார்.

தற்போதைய ஆட்சியாளர்கள் திட்டங்களின் பெயர்களைத் தங்களுக்குத் தகுந்தாற்போல் மாற்றிக் கொண்டாலும், மக்களின் வாழ்க்கையை மாற்றியமைத்த முந்தைய திமுகவின் திட்டங்களைச் சீண்டக் கூடாது என்றும், எதிர்காலத்தில் கிண்டி ரேஸ் கோர்ஸ் பூங்காவை மு.க.ஸ்டாலின் மீண்டும் முதல்வராகப் பொறுப்பேற்றுத் திறந்து வைப்பார் என்ற அசைக்க முடியாத நம்பிக்கை தமக்கு உள்ளதாகவும் சத்யராஜ் பேசி முடித்தார்.

Devi Ramu

Recent Posts

அட கொடுமையே… பட்டாசு வெடித்தால் நிரந்தர பார்வை இழப்பு?… மருத்துவர்கள் விடுக்கும் அதிரடி எச்சரிக்கை… மும்பையில் நடந்த அதிர்ச்சி சம்பவம்…!!

தீபாவளி பண்டிகையின் போது பட்டாசுகளை வெடிக்கும்போது ஏற்படும் விபத்துகளால் கடுமையான தீக்காயங்கள் மற்றும் நிரந்தர பார்வை இழப்பு ஏற்படக்கூடும் என்று…

6 minutes ago

திக் திக்… மகளுடன் தனியாக இருந்த ஊழியர்… ஆத்திரத்தில் முதலாளி செய்த பகீர் காரியம்… பெங்களூரில் அரங்கேறிய கொடூர சம்பவம்…!

பெங்களூரில் நிகழ்ந்த ஒரு கோரச் சம்பவத்தில், தன் உற்பத்திப் பிரிவில் பணிபுரியும் கிரண் என்பவரை, தன் மகளுடன் வீட்டில் தனித்திருந்த…

10 minutes ago

என்னது… விஜய்யும் த்ரிஷாவும் ஒண்ணாவா?… ஜெகன் மோகன் ரெட்டி திருமணத்தில் நடந்த அதிரடி என்ட்ரி… உறைந்துபோன ரசிகர்கள்… இணையத்தை அதிரவைக்கும் வைரல் வீடியோ…!

ஆந்திர முன்னாள் முதலமைச்சர் ஒய்.எஸ். ஜெகன் மோகன் ரெட்டியின் இல்லத் திருமண வரவேற்பு விழா சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது. இந்த…

30 minutes ago

“நவம்பர் 13-க்குப் பின் தமிழ்நாடு அரசியலில் மாபெரும் பூகம்பம்…. CM விஜய் ஆட்சிக்கே ஆபத்தா?”… திமுக-அதிமுக ரகசிய கூட்டணி?…. தலைமைச் செயலகத்தையே அதிரவைத்த உளவுத்துறை ரிப்போர்ட்….!

மே 13 அன்று சட்டசபையில் நடந்த நம்பிக்கை வாக்கெடுப்பில் முதலமைச்சர் விஜய் 144 எம்.எல்.ஏ-க்களின் ஆதரவோடு தனது பெரும்பான்மையை நிரூபித்தார்.…

33 minutes ago

“கடவுள் இருக்கான் குமாரே”…. மரணம் தொட்டுச் சென்ற நொடி…. 8 அடி உயரத்திற்குப் பறந்த பைக் ஓட்டுநர்… அப்புறம் நடந்த அதிசயம்…. ஷாக்கிங் வீடியோ…!

ராஜஸ்தான் மாநிலம் சீகர் மாவட்டத்தில் உள்ள ரீங்கஸ் - காடூ ஷ்யாம் பிரதான சாலையில் பெரும் விபத்து ஒன்று நொடிக்…

42 minutes ago