விசிக இருக்கும் கூட்டணியில் பாமக?… ஒரே போடாய் போட்ட ராமதாஸ்… யாரும் எதிர்பார்க்காத டுவிஸ்ட்…!!

By Nanthini on தை 9, 2026

Spread the love

தமிழக அரசியலில் நிலவிவரும் கூட்டணி கணக்குகளில் புதிய அதிர்வலைகளை ஏற்படுத்தும் விதமாக பாமக நிறுவனர் ராமதாஸ் கருத்து தெரிவித்துள்ளார். அதாவது இன்று தைலாபுரத்தில் செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது விடுதலை சிறுத்தைகள் இருக்கும் கூட்டணியில் பாமக இணையுமா என்ற கேள்வியை செய்தியாளர்கள் முன் வைத்தன. அப்போது, அரசியலில் எது வேண்டுமானாலும் நடக்கும், எதுவும் நடக்காது என்று சொல்ல முடியாது என ராமதாஸ் அளித்த பதில் பெரும் விவாதத்தை கிளப்பியுள்ளது. இதுவரை விடுதலை சிறுத்தைகள் கட்சி மற்றும் பாமக ஆகிய இரண்டு கட்சிகளும் வெவ்வேறு துருவங்களாகவே பார்க்கப்பட்டு வந்தது.

குறிப்பாக கொள்கை ரீதியாகவும் தேர்தல் களத்திலும் இந்த இரண்டு கட்சிகளுக்கும் இடையே கடும் போட்டி நிலவி வந்தது. இப்படியான சூழலில் ராமதாஸின் இந்த நெகிழ்வுத் தன்மை கொண்ட பதில் 2026 சட்டமன்ற தேர்தலில் திமுக கூட்டணியில் இரண்டு கட்சிகளும் இருப்பதற்கான ஆரம்ப புள்ளியாக பார்க்கப்படுகிறது. விடுதலை சிறுத்தைகள் கட்சியின் தலைவர் திருமாவளவனும் சமீபகாலமாக பொதுவான சமூக பிரச்சனைகளில் அனைவரையும் ஒருங்கிணைக்க விரும்புவதாக கூறிவரும் நிலையில் ராமதாஸின் இந்த பேச்சு தற்போது தமிழக அரசியலில் கவனம் பெற்றுள்ளது.