தமிழகத்தில் SIR-ஐ எதிர்க்கும் அரசியல் கட்சிகள்… வாக்காளர்கள் நீக்கப்படுவார்களா..? பீகாரில் எதிரொலித்த உண்மை..!!

Spread the love

பல மாநிலங்களில் சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்காளர் பட்டியல் துல்லியமாகவும், நம்பகத்தன்மை உள்ளதாக இருப்பதை  உறுதி செய்ய இந்திய தேர்தல் ஆணையம் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்த (SIR) பணியை தொடங்கி இருக்கிறது. ஒவ்வொரு வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வதே இதன் முக்கிய நோக்கம். பொதுவாக கிராமங்களில் இருந்து நகர்புறத்திற்கு மக்கள் தொடர்ந்து இடம்பெயர்ந்து வருவதால் வாக்காளர் விவரத்தில் அடிக்கடி மாற்றம் ஏற்படுவதால் இந்த சரிபார்ப்பானது மிகவும் அவசியமான ஒன்றாகிறது. எஸ்ஐஆர் பணியானது நவம்பர் 4ஆம் தேதி தொடங்கிய நிலையில் டிசம்பர் 4 ஆம் தேதியோட முடிவடையும் என்று சொல்லப்பட்டது. ஆனால் மழை உள்ளிட்ட காரணத்தால் பிப்ரவரி 7ஆம் தேதி வரை நீட்டிக்கப்பட்டுள்ளது.

வாக்காளர் பட்டியலில் பெரிய அளவில் திருத்தம் செய்வது இதுவே முதல் முறையா? என்றால் இல்லை. இதற்கு முன்னதாக 2002 மற்றும் 2004 ஆம் வருடத்திற்கு இடையில் இதே போல திருத்தங்கள் செய்யப்பட்டது. அப்போதும் வாக்காளர் விவரங்களில் அதிகமான பிழைகள் இருந்தது குறிப்பிடத்தக்கது. இந்த நிலையில் தமிழகத்தில் திமுக மற்றும் காங்கிரஸ் கட்சிகள் எஸ்ஐஆர் க்கு கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றன. ஏனெனில் இது ஆவணங்கள், விழிப்புணர்வு இல்லாத விளிம்பு நிலை மக்களின் தவறான நீக்கத்திற்கு வழிவகுக்கும் என்று கூறுகின்றன. ஆனால் மத்திய அரசு இந்த குற்றச்சாட்டுகளை நிராகரித்து உள்ளது .தேர்தல் அதிகாரிகளின் இந்த செயல்முறை அனைத்து மாநிலங்களிலும் ஒரே மாதிரியாக இருப்பதாகவும், முற்றிலும் நிர்வாக ரீதியாகவும், அரசியல் செல்வாக்கு இல்லாததாகவும் இருக்க வேண்டும் என்று எதிர்கட்சிகள் வலியுறுத்தி வருகின்றன.

பீகாரிலும் இதே போல எஸ்ஐஆர்  பணிகள் மேற்கொள்ளப்பட்டது. இதனால் ஏராளமான வாக்காளர்கள் நீக்கப்படுவார்கள் என்று அச்சம் நிலவி வந்த நிலையில் அம்மாநிலத்தில் வாக்குப்பதிவானது அதிகரித்துள்ளது .ஒட்டுமொத்தமாக 66.91% பெண்கள் முந்தைய தேர்தலை காட்டிலும் அதிகமாக வாக்களித்தார்கள்.  வாக்காளர் பட்டியல்களின் துல்லியத்தை மேம்படுத்துவதில் எஸ்ஐஆர் ஒரு குறிப்பிடத்தக்க படி. அதை சுற்றி அரசியல் இருப்பதாக குற்றச்சாட்டுகள் எழுத்தாலும் இந்த செயல்முறை சட்டத்தை அடிப்படையாகக் கொண்டது.  வாக்காளர்களை பொறுத்தவரை அவர்களுடைய விவரங்களை சரி பார்ப்பதும், அதிகாரிகளோடு ஒத்துழைப்பதும் அவர்கள் உரிமைகள் பாதுகாக்கப்படுவதையும் உறுதி செய்கிறது. மேலும் நன்பகத் தன்மை உள்ள, பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியல் பங்கேற்பதை வலுப்படுத்துகிறது.

Soundarya

Recent Posts

அய்யோடா… இது என்னது?… காசு கொடுத்தா போதும்… உங்களுக்காக நான் சண்டை போடுறேன்… ரூ 2,600 கட்டணத்தில் சீனாவில் உருவான அதிரடிச் சேவை… இணையத்தில் வைரல் வீடியோ…!

சீனாவில் உள்ள குவாங்சூ நகரில்லைச் சேர்ந்த நபர் ஒருவர், மற்றவர்களுக்காகப் பேசிச் சண்டையிடும் அல்லது விவாதிக்கும் வித்தியாசமான சேவையை வழங்கி…

9 minutes ago

சாதாரண வயிறு வலின்னு அலட்சியப்படுத்தாதீங்க… 8 வயது இளம் பெண்ணின் வயிற்றிலிருந்து அகற்றப்பட்ட பிரம்மாண்ட கட்டி… ஷாக்கான மருத்துவர்கள்… வைரலாகும் வீடியோ…!!

பொதுவாக 30 முதல் 50 வயதுடைய பெண்களுக்கு மட்டுமே வரக்கூடிய கர்ப்பப்பை நார்திசுக்கட்டி, தற்போது 28 வயது இளம்பெண்ணின் வயிற்றிலிருந்து…

27 minutes ago

ஐயோ கடவுளே… கடலில் சுறாவை செல்லமாகத் தடவ முயன்ற பெண்… நொடியில் நடந்த கொடூரம்… பதறவைக்கும் வைரல் வீடியோ…!

ஜார்ஜியா மாநிலம் டைபி தீவு அருகே முன்னாள் ராணுவ வீரர்களுக்கான தொண்டு நிறுவனமான 'நாட் லக்கி பிஷிங்' அமைப்பின் சார்பாக…

32 minutes ago

எவ்வளவு அடிச்சாலும் உடையாதுடா… கடையை நொறுக்கப் பார்த்த… கும்பலுக்கு லூயிஸ் வியூட்டன் கொடுத்த ஷாக் பதிலடி… பிரான்ஸில் நடந்த சம்பவம்…!

பிரான்சில் நடைபெற்ற போராட்டங்களின் போது லூயிஸ் வியூட்டன் கடை மீது கும்பல் ஒன்று தாக்குதல் நடத்தியது சமூக வலைதளங்களில் வைரலானது.…

36 minutes ago

ரூ.1.45 கோடி கார்ப்பரேட் வேலையை தூக்கி எறிந்த பெண்… 4 மாத நாய் நடைப்பயிற்சி தந்த மாபெரும் மாற்றம்… இணையத்தின் ஹாட் டாபிக்…!!

அமெரிக்காவில் மிக அதிக சம்பளம் தந்த கார்ப்பரேட் மார்க்கெட்டிங் வேலையைத் துறந்து, நாய்களை நடைப்பயிற்சிக்கு அழைத்துச் செல்லும் தொழிலை தொடங்கிய…

53 minutes ago