50 லட்சம் உறுப்பினர்களா?…. அண்ணாமலை வைத்த மெகா கண்டிஷன்… அதிர்ச்சியில் அரசியல் வட்டாரம்….!

By Nanthini on ஆவணி 17, 2026

Spread the love

பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை, அக்கட்சியிலிருந்து விலகி ‘வி தி லீடர்ஸ்’ (We The Leaders) என்ற புதிய இயக்கத்தைத் தொடங்கி தீவிர உறுப்பினர் சேர்க்கைப் பணிகளில் ஈடுபட்டு வருகிறார். சென்னை மெரினா கடற்கரை அருகே நேற்று நடைபெற்ற சுற்றுச்சூழல் விழிப்புணர்வுப் பேரணியில் கலந்து கொண்டு உரையாற்றிய அவர், தனது புதிய அரசியல் கட்சியின் தொடக்கம் குறித்த முக்கியமான விளக்கத்தை அளித்தார். அடுத்த மாதமே கட்சி பெயர் மற்றும் கொடி அறிவிக்கப்படலாம் என்று தகவல்கள் பரவி வந்த நிலையில், ‘வி தி லீடர்ஸ்’ இயக்கத்தில் 50 லட்சம் உறுப்பினர்கள் சேர்ந்த பிறகே அதிகாரப்பூர்வ அரசியல் கட்சி தொடங்கப்படும் என்று அவர் தெளிவுபடுத்தியுள்ளார்.

தற்போது இந்த இயக்கத்தில் இணைய வழியில் உறுப்பினர்கள் சேர்க்கை விறுவிறுப்பாக நடைபெற்று வருகிறது. இன்று மாலை நிலவரப்படி சுமார் 19.5 லட்சம் பேர் இந்த இயக்கத்தில் தங்களை இணைத்துக் கொண்டுள்ள சூழலில், இலக்கை அடைய இன்னும் 30 லட்சத்திற்கும் மேற்பட்ட உறுப்பினர்கள் தேவைப்படுகின்றனர். மக்களின் பங்களிப்பையும் தலைமுறை மாற்றத்தையும் முன்னிறுத்திச் செயல்பட விரும்புவதால், இந்த 50 லட்சம் என்ற இலக்கை அடைந்த பின்னரே கட்சியின் பெயர், கொள்கைகள் மற்றும் லட்சியங்கள் முறைப்படி அறிவிக்கப்பட்டு முழு அளவிலான அரசியல் இயக்கம் தொடங்கப்படும் என்பதில் அவர் உறுதியாக உள்ளார்.