திருப்பூர் மாவட்டம் அவினாசியை சேர்ந்தவர் ராஜேந்திரன்(51). இவர் அதிமுக கிளை செயலாளராக உள்ளார். இவரது மனைவி சாந்தி அவிநாசி நகராட்சியின் 12-வது வார்டு கவுன்சிலராக உள்ளார். சமீபத்தில் ராஜேந்திரன் மன வளர்ச்சி பாதிக்கப்பட்ட ஒரு சிறுமிக்கு பாலியல் ரீதியாக தொந்தரவு அளித்துள்ளார்.
இதுகுறித்து அறிந்த சிறுமியின் பெற்றோர் ராஜேந்திரனிடம் தட்டிக் கேட்டபோது பேரூராட்சி முன்னாள் துணை தலைவர் மூர்த்தியுடன் சேர்ந்து புகார் அளிக்கக்கூடாது என சிறுமியின் பெற்றோரை மிரட்டியதாக தெரிகிறது. இது குறித்து பாதிக்கப்பட்ட சிறுமியின் பெற்றோர் காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் ராஜேந்திரனை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மூர்த்தி மீது போலீசார் வழக்கு பதிவு செய்துள்ளனர்.
