மீண்டும் பவர் ஹவுஸாக மாறிய இபிஎஸ்.. அறிவாலயத்தையே அதிரவைத்த எடப்பாடியின் மாஸ் கேம்.. அதிர்ச்சியில் உறைந்த அரசியல் வட்டாரம்..!!

By Muthu Mani on வைகாசி 28, 2026

Spread the love

தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு அதிமுகவின் வரலாற்றில் இல்லாத அளவிற்குப் பெரும் சரிவைச் சந்தித்து, உள்கட்சிப் பிளவின் விளிம்பிற்கே சென்றது. தேர்தலில் வெறும் 47 இடங்களை மட்டுமே கைப்பற்றிய சூழலில், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கு எதிராக எஸ்பி வேலுமணி – சிவி சண்முகம் தலைமையில் ஒரு அணியினர் போர்க்கொடி தூக்கினர். புதிதாகப் பதவியேற்ற தவெக அரசில் தங்களுக்கு இடம் கிடைக்கும் என்ற நம்பிக்கையில் அவர்கள் இபிஎஸ்ஸை எதிர்த்த போதிலும், தவெக தலைவர் விஜய் அவர்களுக்கு ஏமாற்றத்தையே பரிசாக அளித்தார். இதன் காரணமாக, வேறு வழியின்றி அவர்கள் அனைவரும் மீண்டும் எடப்பாடி பழனிசாமி பக்கமே தஞ்சம் அடையத் தொடங்கியுள்ளனர்.

இன்று சிவி சண்முகம் தவிர மற்ற அனைத்து அதிருப்தி எம்எல்ஏ-க்களும் எடப்பாடி பழனிசாமியை நேரில் சந்தித்து தங்களது ஆதரவை மீண்டும் தெரிவித்துள்ளனர். தனித்து நிற்கும் சிவி சண்முகத்தையும் மீண்டும் கட்சிக்குள் கொண்டு வர தங்கமணி மூலமாகப் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருகிறது. தன்னை வீழ்த்த நினைத்தவர்களை மீண்டும் தன் தலைமையை ஏற்க வைத்திருப்பது இபிஎஸ் ஆதரவாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. எனினும், தனக்கு எதிராகத் திரும்பியவர்களுக்கு இபிஎஸ் மீண்டும் கட்சியில் முக்கியப் பொறுப்புகளை வழங்குவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது. குறிப்பாக, திமுக – அதிமுக கூட்டணி விவகாரத்தைப் போட்டு உடைத்து, இபிஎஸ்ஸைக் கடுமையாக விமர்சித்த சிவி சண்முகம் மீது எடப்பாடி பழனிசாமி கடும் கோபத்தில் இருப்பதாகக் கூறப்படுகிறது.

   

இந்த உள்கட்சி மோதல்களுக்கு அதிரடியாக முற்றுப்புள்ளி வைத்ததன் மூலம், அதிமுகவின் சட்டமன்றத் தலைவராக எடப்பாடி பழனிசாமியே பொறுப்பேற்பது தற்போது உறுதியாகியுள்ளது. தேர்தல் முடிவுகள் வெளியானது முதல் பதற்றத்தில் இருந்த அதிமுக தொண்டர்கள் இந்த இணைப்பால் நிம்மதி அடைந்துள்ளனர். இன்னும் சில மாதங்களில் தமிழ்நாட்டில் உள்ளாட்சித் தேர்தல் நடைபெற உள்ளதால், அதில் தனது பலத்தைக் காட்ட அதிமுக பணிகளைத் தொடங்கவுள்ளது. மேலும், இனிவரும் காலங்களில் தனக்கு எதிராக யாரும் செயல்படாத வகையிலும், தனது தலைமைக்குப் பாதிப்பு ஏற்படாத வகையிலும் கட்சிக் கட்டமைப்பை வலுப்படுத்த இபிஎஸ் திட்டமிட்டுள்ளார்.