மொத்தக் கடன் 20 லட்சம் கோடியா உயரும்.. என்ன பண்றீங்கன்னு பார்க்கத்தான போறோம்.. வெள்ளை அறிக்கை விவகாரத்தில் வெடித்த அரசியல் போர்..!

Spread the love

தமிழகத்தின் தற்போதைய தவெக அரசு வெளியிட்ட நிதிநிலை வெள்ளை அறிக்கை குறித்து, முன்னாள் நிதியமைச்சரும் திமுக மூத்த தலைவருமான தங்கம் தென்னரசு கடுமையான விமர்சனங்களை முன்வைத்துள்ளார். தவெக அரசு வெளியிட்டுள்ள இந்த அறிக்கை நிதிநிலையை விளக்கும் ‘வெள்ளை அறிக்கை’ அல்ல, மாறாக அது ஒரு ‘வெற்று அறிக்கை’ என்று அவர் சாடியுள்ளார். தவெக அரசு தனது நிர்வாகத் திறமையின்மையையும், தேர்தல் சமயத்தில் கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்ற முடியாத இயலாமையையும் மூடிமறைக்கவே இந்த நாடகத்தை நடத்துவதாக அவர் குற்றம் சாட்டியுள்ளார்.

தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றுவது தொடர்பாகப் பேசிய தங்கம் தென்னரசு, “நீங்கள் கொடுத்த தேர்தல் வாக்குறுதிகளை முழுமையாக நிறைவேற்ற வேண்டுமென்றால் சுமார் ரூ.6 லட்சம் கோடி நிதி தேவைப்படும்” என்று சுட்டிக்காட்டியுள்ளார். மேலும், அரசு மூலதனச் செலவுகளுக்காக வெறும் ரூ.50,000 கோடியைச் செலவிட்டாலும் கூட, மாநிலத்தின் மொத்தக் கடன் சுமை ரூ.20 லட்சம் கோடியாக உயரும் அபாயம் உள்ளது என்றும் அவர் புள்ளிவிவரங்களுடன் விளக்கியுள்ளார்.

“இதை மக்கள் அனைவரும் பார்த்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்; கடன் சுமை இந்த அளவுக்கு உயரும் போது நீங்கள் என்ன சொல்லப் போகிறீர்கள் என்பதை நாங்களும் பார்க்கத்தான் போகிறோம்” என்று தவெக அரசுக்கு தங்கம் தென்னரசு சவால் விடுத்துள்ளார். சாத்தியமில்லாத கவர்ச்சிகரமான வாக்குறுதிகளைக் கொடுத்துவிட்டு, இப்போது மக்கள் கேட்கும் கேள்விகளிலிருந்து தப்பிக்க தவெக அரசு இந்த வெள்ளை அறிக்கையை ஒரு தற்காப்புப் பாதையாகப் பயன்படுத்துகிறது என்பதே இவரின் முக்கியக் குற்றச்சாட்டாகும்.

Soundarya

Recent Posts

கடவுள் இருக்கான் குமாரு… நடுரோட்டில் காரில் சரிந்த நபர்… பேருந்தில் இருந்து ஓடிவந்த 2 பெண்கள் செய்த ‘அந்த’ காரியம்… பதறவைக்கும் பின்னணி…!

கேரள மாநிலம் எர்ணாகுளம் மாவட்டம் அங்கமாலி அருகே, போக்குவரத்து சிக்னலில் காரில் காத்துக்கொண்டிருந்த ஒருவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்ட நிலையில்,…

1 minute ago

தமிழகத்தில் இடைத்தேர்தல் இல்லை… தேர்தல் ஆணையம் போட்ட ஸ்கெட்ச்… கதறும் TVK முக்கியப் புள்ளிகள்…!

தமிழகத்தில் காலியாக உள்ள சட்டமன்றத் தொகுதிகளுக்கான இடைத்தேர்தல் அறிவிப்பு வெளியாவதில் ஏற்பட்டுள்ள தாமதம், அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…

14 minutes ago

“ஈரான் தலைவர்களைக் கொல்ல துடித்த இஸ்ரேல்”.. நடுவழியில் புகுந்து அமெரிக்கா செய்த பகீர் காரியம்… வளைகுடா நாடுகளை அதிரவைத்த அந்த ரகசிய மெசேஜ்….!

அமெரிக்காவுக்கும் ஈரானுக்கும் இடையே கடந்த சில மாதங்களாகவே கடுமையான மோதல் நிலவி வந்த சூழலில், ஈரானின் முக்கிய தலைவர்கள் சிலரை…

19 minutes ago

“ஒரு எம்.எல்.ஏ-வுக்கு ரூ.35 கோடியா?…. மொத்த பட்ஜெட் ரூ.180 கோடி”… தவெக-வை மிரள வைத்த கார்ப்பரேட் டீலிங்…. அம்பலமான ரகசியம்….!

தமிழகத்தில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தின் கூட்டணி ஆட்சியை கவிழ்க்க சதித் திட்டம் தீட்டியதாக இதுவரை மொத்தம்…

22 minutes ago

FLASH NEWS: திருப்பரங்குன்றம் வழக்கில் மதுரை கோர்ட் போட்ட அதிரடி உத்தரவு… அம்பலமாகப் போகும் அந்த ரகசியம்….!

திருப்பரங்குன்றம் மலையைத் தொல்லியல் துறையின் கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவருவது தொடர்பான வழக்கில், மலையை மறு அளவீடு செய்ய நான்கு வாரக் கால…

44 minutes ago

BREAKING: தமிழகத்தையே உலுக்கிய அதிரடி வேட்டை… ஒரே நேரத்தில் 40 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை அதிரடி ரெய்டு…!

தமிழ்நாடு முழுவதும் மாநகராட்சி மற்றும் நகராட்சி அலுவலகங்களைக் குறிவைத்து லஞ்ச ஒழிப்புத்துறையினர் (DVAC) இன்று அதிரடி சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.…

49 minutes ago