பெற்றோர்களே உடனே கிளம்புங்க… தமிழகத்தில் இன்று 6 மாவட்டங்களில்… அரசு முக்கிய அறிவிப்பு…!

By Nanthini on ஐப்பசி 12, 2025

Spread the love

தமிழகத்தில் செங்கல்பட்டு, மயிலாடுதுறை, தஞ்சை, நெல்லை, சிவகங்கை மற்றும் விருதுநகர் ஆகிய ஆறு மாவட்டங்களில் மத்திய அரசு சார்பாக இன்று போலியோ சொட்டு மருந்து முகாம் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அரசு நகர்புற, ஆரம்ப சுகாதார நிலையங்கள், துணை சுகாதார நிலையங்கள், அரசு மருத்துவமனைகள் உட்பட பல்வேறு இடங்களில் இந்த முகாம்கள் காலை 9.15 மணிக்கு தொடங்குகின்றன. 5 வயதிற்கு உட்பட்ட குழந்தைகளுக்கு சொட்டு மருந்து போட வேண்டும் என்பதால் பெற்றோர்கள் மறக்காமல் இன்று போலியோ சொட்டு மருந்து போட அறிவுறுத்தப்பட்டுள்ளது.