அரைகுறை ஆடையில் விசாரணை… இரவில் பெண்ணின் வீட்டுக்குள் நுழைந்த போலீஸ் அதிகாரி… பரபரப்பு வீடியோ…!

By Divyamayakannan on ஆவணி 23, 2025

Spread the love

பீகார் மாநிலத்தில் கயா மாவட்டத்தில் நடந்த சம்பவம் ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. பீகாரில் ஒரு வீட்டிற்கு காவலர் விசாரணை என்றப் பெயரில் வீட்டின் உள்ளே சென்று அமர்ந்துள்ளார். வீட்டுக்குள்ளேயே மதுவும் அருந்தியுள்ளார். மது அருந்திய காரணத்தினால் போலீசார்களுடன் விவாதம் நடந்துள்ளது. காவலர் பனியன் மற்றும் உள்ளாடை மட்டுமே அணிந்து பெண்ணின் வீட்டுக்குள் புகுந்து தவறாக செய்துள்ளார். பீகாரில் மது தடை உள்ளது. இருப்பினும் காவலருக்கு எப்படி மது கிடைத்தது என்று தெரியவில்லை.

காவலர் செய்த இந்த செயலினால் மக்கள் பெரும் கோபத்தில் உள்ளனர். தற்போது வீடியோவில் பிரபலமான காவலர் தலைமறைவாக உள்ளார் என்று அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகி உள்ளது. இச்சம்பவம், பொதுமக்களைப்  பாதுகாக்க வேண்டிய நீங்களே இப்படி செய்தால் எப்படி குற்றத்தை தட்டிக் கேட்க முடியும் என்ற கேள்வி எழுப்பியுள்ளனர் . பீகார் காவலர் செய்த அட்டூழியம் அனைத்தும் வீடியோவாக சமூக வலைத்தளத்தில் பரவி வருகிறது. இந்தச் சம்பவம் பொதுமக்களிடையே போலீசாரின் மீது இருந்த நம்பிக்கை சுக்குநூறாகிவிட்டது.