கோவை மாவட்டம் பொள்ளாச்சி தாலுகா காவல் நிலையத்தில் இன்ஸ்பெக்டரின் டிரைவராக தென்காசி மாவட்டத்தை சேர்ந்த மாதவ கண்ணன் என்ற 27 வயது வாலிபர் பணியாற்றி வந்துள்ளார். இவர் இன்ஸ்பெக்டரிடம் குடும்ப உறுப்பினர் போல பழகி வந்த நிலையில் இன்ஸ்பெக்டர் தன்னுடைய மகள்களை பார்த்துக் கொள்வதற்காக உறவினரான இளம் பெண் ஒருவரை வீட்டில் தங்க வைத்துள்ளார். கடந்த இரண்டு நாட்களாக வேலை காரணமாக இன்ஸ்பெக்டர் மதுரையில் உள்ள தன்னுடைய வீட்டுக்கு செல்ல முடியவில்லை.
இதனால் தன்னுடைய டிரைவரான மாதவ கண்ணனை பாதுகாப்புக்காக அவருடைய வீட்டுக்கு அனுப்பி வைத்துள்ளார். இந்நிலையில் வீட்டிலிருந்த இளம் பெண் குளித்துக் கொண்டிருந்தபோது அதனை மறைந்திருந்து மாதவ கண்ணன் செல்போனில் வீடியோவாக பதிவு செய்துள்ளார். இதனைக் கண்டு அதிர்ச்சி அடைந்த இளம் பெண் உடனடியாக செல்போன் மூலம் நடந்த சம்பவம் பற்றி இன்ஸ்பெக்டரிடம் கூறி அழுத நிலையில் உடனே போலீசில் புகார் அளிக்கப்பட்டது. இந்த புகாரைத் தொடர்ந்து போலீஸ் ஆர் விசாரணை நடத்தி மாதவ கண்ணனை கைது செய்துள்ளனர். இந்த சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியுள்ளது.
2026 தமிழக சட்டசபை தேர்தலில் அதிமுக சந்தித்த படுதோல்வி, அக்கட்சிக்குள் நீண்டகாலமாக புகைந்து கொண்டிருந்த அதிருப்தியை தற்போது எரிமலையாக வெடிக்கச்…
தமிழகத்தின் புதிய முதலமைச்சராக விஜய் பதவியேற்கும் வரலாற்றுச் சிறப்புமிக்க தருணத்தில், தமிழ்த்தாய் வாழ்த்து பாடப்பட்ட வரிசை பெரும் அரசியல் அதிர்வலைகளை…
ஈரான் கடந்த 47 ஆண்டுகளாக அமெரிக்கா மற்றும் உலக நாடுகளுடன் ஆபத்தான விளையாட்டுகளை விளையாடி வருவதாக டொனால்ட் டிரம்ப் மிகக்…
விஜய் தலைமையிலான அரசு பதவியேற்றாலும், தேர்தலின் போது அளித்த பிரம்மாண்ட வாக்குறுதிகளை நிறைவேற்றுவது மிகப்பெரிய நிதிச் சவாலாக இருக்கும். குறிப்பாக,…
தமிழக அரசியலில் சுமார் 60 ஆண்டுகால திராவிடக் கட்சிகளின் ஆதிக்கத்தை முறியடித்து, தமிழக வெற்றிக் கழகத்தின் (தவெக) தலைவராகப் பதவியேற்றுள்ள…
கொரோனா பெருந்தொற்று ஏற்படுத்திய வடுக்கள் இன்னும் மறையாத நிலையில், தற்போது 'ஹண்டா வைரஸ்' (Hantavirus) குறித்த செய்திகள் மக்களிடையே பெரும்…