வேலூர் மாவட்டம் கஸ்பா வசந்தபுரம் பொன்னி நகரில் வசிப்பவர் வேல்முருகன். 39 வயதான இவருக்கு ஆஷா என்ற மனைவியும், சர்வேஷ், சாத்விக் என்ற இரண்டு மகன்களும் உள்ளார்கள். கடந்த சில வருடங்களுக்கு முன்பு ஆம்பூர் அருகே விபத்தில் சிக்கி படுகாயம் அடைந்து மாற்றுத்திறனாளி ஆனார். இதனால் வேல்முருகன் புற காவல் நிலையத்தில் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டிருந்தார். விபத்து ஏற்பட்டதில் காலில் அடிபட்டு நடக்க முடியாமலும், தூங்க முடியாமலும் அவதிப்பட்டு வந்ததாக கூறப்படுகிறது. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான வேல்முருகன் நேற்று முன்தினம் இரவு பணி முடித்துவிட்டு வீட்டுக்கு மூன்று சக்கர வாகனத்தில் செல்லும்போது வசந்தபுரம் சுடுகாட்டு எரிமேடைக்கு சென்றுள்ளார்.
அங்கு அவர் வைத்திருந்த பெட்ரோலை எடுத்து உடலில்ஊற்றி தீ வைத்துக் கொண்டு சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்துள்ளார். இரவில் வேல்முருகன் வீட்டிற்கு வராததால் அவருடைய குடும்பத்தினர் அக்கம் பக்கத்தில் தேடியுள்ளார்கள். அப்போது அந்த வழியாக ஆடுமேய்க்க சென்றவர்கள் எரிந்த நிலையில் ஒருவருடைய சடலம் கிடைப்பதாக காவல் நிலையத்துக்கு தகவல் கொடுத்துள்ளார்கள் . இதனை அடுத்து சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் அதில் இறந்து கிடந்தவர் போலீஸ் ஏட்டு வேல்முருகன் என்பதை கண்டுபிடித்துள்ளனர். பின்னர் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்துள்ளார்கள். இது குறித்து போலீசார் கூறுகையில் நேற்று முன்தினம் வேல்முருகனுக்கு பிறந்தநாள் அவர் மது குடித்ததாக தெரிகிறது. தொடர்ந்து அவர் சுடுகாட்டிற்கு சென்று தற்கொலை செய்து கொண்டுள்ளார் என்று கூறப்படுகிறது. மேலும் இது குறித்து வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
பெருவின் சான் ஜுவான் டி லூரிகாஞ்சோ பகுதியில் உள்ள காம்போய் நகர்ப்புறப் பிரிவில் அதிர்ச்சியளிக்கும் குற்றச்சம்பவம் ஒன்று நடந்துள்ளது. சாலையில்…
பாலியல் வன்கொடுமை மற்றும் அது தொடர்பான வன்முறைகள் தொடர்பான காணொளிகளைப் பகிர்வதோ, அது குறித்துத் தனிநபர்களைத் திரட்டிப் பின்தொடர்வதோ சட்டப்பூர்வமாகவும்…
சிபிஎம் தலைவர் பி. சசியின் சகோதரரான பி. சரசன் (54) அடூர் பாலம் அருகே நிகழ்ந்த பயங்கரச் சாலை விபத்தில்…
தெலங்கானா மாநிலம் பூபாலபள்ளி மாவட்டத்தில் குடும்பத் தகராறு காரணமாகத் தனது காதலனுடன் சேர்ந்து கணவரைக் கொடூரமாகக் கொலை செய்த மனைவி…
ஜாலான் மாவட்டம் குடவுந்த் காவல் எல்லைக்குட்பட்ட தூங்கர்பூர்வா கிராமத்தில், மொபைல் போன் தொடர்பான தகராறில் 8 வயது சிறுவன் ஒருவன்…
குஜராத் மாநிலம் வடோதராவின் நவி ராம்வாடி பகுதியில் நிறுத்தப்பட்டிருந்த சிஎன்ஜி கார் ஒன்று திடீரென தீப்பற்றி, எதிர்பாராதவிதமாக பயங்கர சத்தத்துடன்…