போலீஸா இல்லை கிரிமினலா?… மெத்தைக்குள் போதைப்பொருள்… அம்பலமான பகீர் திட்டம்… சிசிடிவியில் சிக்கிய பகீர் காட்சி…!!

By Gayathri on கார்த்திகை 2, 2026

Spread the love

பஞ்சாப் மாநிலம் கன்னாவில் சிவசேனா நிர்வாகியான மஹந்த் காஷ்மீர் கிரி என்பவரின் வீட்டில், சாதாரண உடையில் வந்த காவல் உதவி ஆய்வாளர் சுக்தேவ் சிங் படுக்கை மெத்தைக்கு அடியில் மர்மப் பொருள் ஒன்றை வைக்கும் காட்சி அங்குள்ள கண்காணிப்புக் கேமராவில் பதிவானது. அடுத்த சில நிமிடங்களிலேயே அங்கு சோதனை மேற்கொண்ட காவல்துறையினர், அதே மெத்தையின் அடியிலிருந்து 30 கிராம் ஹெராயின் போதைப்பொருளைப் பறிமுதல் செய்து அவரைக் கைது செய்தனர்.

பொதுமக்களிடையே பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய இக்காணொளி சமூக ஊடகங்களில் பரவியதைத் தொடர்ந்து, காவல் கண்காணிப்பாளர் தர்பன் அலுவாலியா தீவிர நடவடிக்கை மேற்கொண்டார். போலி ஆதாரம் வைத்து வழக்குப் பதிவு செய்ய முயன்றதாகக் கூறப்படும் உதவி ஆய்வாளர் சுக்தேவ் சிங் உடனடியாகப் பணி இடைநீக்கம் செய்யப்பட்டதோடு, இச்சம்பவம் குறித்து விரிவான விசாரணை நடத்த சிறப்புப் புலனாய்வுக் குழுவும் அமைக்கப்பட்டு, காஷ்மீர் கிரி வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார்.