“கதறி அழுத 3 1/2 வயது குழந்தை…” வயலுக்கு தூக்கி சென்ற 48 வயது நபர்…. பெற்றோருக்கு காத்திருந்த பேரதிர்ச்சி…. போலீஸ் அதிரடி…!!

By Devi Ramu on தை 7, 2026

Spread the love

உத்திரபிரதேச மாநிலத்தில் மூன்றரை வயது சிறுமியை ஒருவர் பாலியல் பலாத்காரம் செய்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. 48 வயதுடைய கஜேந்திரா என்ற நபர் 3 1/2 வயது பெண் குழந்தையை வயலுக்கு தூக்கி சென்று பாலியல் பலாத்காரம் செய்துள்ளார். இதுகுறித்து அறிந்த பெற்றோர் தங்களது குழந்தையை மீட்டு காவல் நிலையத்தில் புகார் அளித்தனர்.

அந்த புகாரின் பேரில் வழக்கு பதிவு செய்த போலீசார் கஜேந்திரனை பிடிக்க சென்றனர். அப்போது அவர் போலீஸிடம் இருந்து தப்பி ஓட முயற்சி செய்ததால் போலீசார் அவரை சுட்டு பிடித்தனர். அவரிடம் இருந்து நாட்டு துப்பாக்கி, பதிவெண் இல்லாத வாகனம் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. இந்த சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.