“100 நிமிட போராட்டம்…” 19-வது மாடி கட்டிடத்தில் தொங்கி தற்கொலை முயற்சி… இளம்பெண் முடியை பிடித்து காப்பாற்றிய போலீசார்…. இணையத்தில் வைரலாகும் சிலிர்க்க வைக்கும் வீடியோ…!!

By Devi Ramu on ஆவணி 25, 2026

Spread the love

தென் கொரியா நாட்டின் சியோல் நகரில் உள்ள கங்நாம் நிலையம் அருகே உள்ள 19 மாடி உயரமான கட்டிடத்தின் மாடியின் விளிம்பில் நின்று கொண்டு இளம் பெண் ஒருவர் தற்கொலைக்கு முயன்ற சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

அதிவேகமாகச் செயல்பட்ட போலீஸ் அதிகாரி ஒருவர், துணிச்சலாகக் கட்டிடத்தின் விளிம்பிற்குச் சென்று அந்தப் பெண்ணின் தலைமுடியைப் பற்றியும், கையைப் பற்றியும் கீழே விழாமல் தடுத்து நிறுத்தினார். உடனடியாக மற்றொரு அதிகாரியும் உதவிக்கு வர, இருவரும் இணைந்து அந்தப் பெண்ணைக் காற்றில் தொங்கியவாறு பலமாகப் பிடித்துக் கொண்டனர்.

   

இந்த ஆபத்தான சூழ்நிலையில், அவசரகால மீட்புக் குழுவைச் சேர்ந்த 71 பேர் களமிறக்கப்பட்டு, கட்டிடத்திற்குக் கீழே காற்று மெத்தை உடனடியாகப் பொருத்தப்பட்டது. சுமார் 100 நிமிடங்கள் நீடித்த இந்தப் போராட்டத்திற்குப் பிறகு, காவலர்களின் தீவிர முயற்சியாலும் அந்தப் பெண் பத்திரமாக மீட்கப்பட்டார். இவர்களின் வீரத்தை வியந்து பலரும் பாராட்டுக்களைத் தெரிவித்து வருகின்றனர்.