பீதர் மருத்துவ அறிவியல் நிறுவனத்தின் மாவட்ட அரசு மருத்துவமனையின் அவசரப் பிரிவுக்குள் நேற்று முன்தினம் நள்ளிரவில் போதையில் வந்த இரண்டு இளைஞர்கள் மோட்டார் சைக்கிளை ஓட்டிச் சென்ற சம்பவம் பெரும் பரபரப்பையும் அதிர்ச்சியையும் ஏற்படுத்தியது. கடுமையான தலைவலி இருப்பதாகக் கூறி மருத்துவமனைக்கு வந்த அந்த இருவரும், எவ்வித நடைமுறைகளையும் பின்பற்றாமல் நேரடியாக அவசர சிகிச்சைப் பிரிவுக்குள்ளேயே வாகனத்தை ஓட்டியதுடன், அங்கு சிகிச்சை பெற்றுக்கொண்டிருந்த நோயாளிகள் மற்றும் மருத்துவப் பணியாளர்களின் பாதுகாப்பைக் கேள்விக்குறியாக்கினர்.
https://twitter.com/HateDetectors/status/2081241547547541862/photo/1
அங்கு பாதுகாப்புப் பணியில் ஈடுபட்டிருந்த காவல்துறையினர் உடனடியாகத் தலையிட்டு அந்த மோட்டார் சைக்கிளைத் தடுத்து நிறுத்தினர். இருப்பினும், காவல்துறையினருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டு அவர்கள் தப்பிக்க முயன்றதால், சூழ்நிலையைக் கட்டுக்குள் கொண்டுவர காவல்துறையினர் லேசான பலத்தைப் பயன்படுத்தி அவர்களை மடக்கிப் பிடித்தனர். இந்தச் சம்பவம் தொடர்பாக வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், காவல்துறையினர் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். மருத்துவமனைக்குள் வாகனம் அத்துமீறி நுழைந்த இந்தச் சம்பவம் அப்பகுதியில் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
