பாதுகாக்க வேண்டியவரே இப்படி செய்யலாமா?… பெண்ணிடம் மொபைல் நம்பர் கொடுத்த காவலர்… ஓடும் ரயிலில் அரங்கேறிய அதிர்ச்சி… வைரலாகும் வீடியோ..!!

By Rajeshwari on பங்குனி 29, 2026

Spread the love

ரயிலில் பயணம் செய்து கொண்டிருந்த இளம்பெண் ஒருவரிடம், பணியில் இருந்த காவலர் ஒருவர் அநாகரிகமாக நடந்துகொண்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. ரயில் பயணத்தின் போது அந்த பெண்ணிடம் நெருங்க முயன்ற காவலர், தனது தொலைபேசி எண்ணை ஒரு காகிதத்தில் எழுதி அவரிடம் கொடுத்துள்ளார். காவலரின் இந்த வரம்பு மீறிய செயலால் அதிர்ச்சியடைந்த அந்த பெண், உடனடியாக தனது செல்போனை எடுத்து அந்த நிகழ்வை வீடியோவாகப் பதிவு செய்யத் தொடங்கினார்.

மேலும் தான் பிடிபடுவதை உணர்ந்த அந்த காவலர், அங்கிருந்து உடனடியாகத் தப்பி ஓடிவிட்டார். இந்தச் சம்பவம் தொடர்பான வீடியோ தற்போது இணையதளங்களில் வேகமாகப் பரவி, பொதுமக்களிடையே பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்தியுள்ளது. பயணிகளின் பாதுகாப்பிற்குப் பொறுப்பான ஒரு காவலரே இதுபோன்ற செயலில் ஈடுபட்டது கடும் விமர்சனத்திற்கு உள்ளாகியுள்ளது.

   

 

View this post on Instagram

 

A post shared by Abhishek Singh (@abhishek.media)

   

“>

 

இந்நிலையில் அந்த இளம்பெண் காட்டிய துணிச்சலைப் பலரும் பாராட்டி வரும் நிலையில், சம்பந்தப்பட்ட காவலர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் எனப் பலரும் கோரிக்கை விடுத்து வருகின்றனர். காவல்துறை இந்த விவகாரத்தை தீவிரமாக விசாரித்து வருவதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.