கண்கலங்க வைக்கும் காட்சி…. குடியரசு தினத்தில் தேசத்திற்காக உயிர்நீத்த காவல் அதிகாரி…. வைரலாகும் வீடியோ.!

Spread the love

மராட்டிய மாநிலம் தாராஷிவ் மாவட்டத்தில், குடியரசு தின பாதுகாப்பு பணியில் ஈடுபட்டிருந்த காவல் அதிகாரி ஒருவர் மாரடைப்பால் உயிரிழந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. உமர்கா பகுதியில் உள்ள தல்மோத் சோதனைச் சாவடியில் பாதுகாப்புப் பணியில் இருந்த மோகன் ஜாதவ் என்ற அந்த காவல் அதிகாரி, சுதந்திரப் போராட்ட வீரர்களுக்கு மௌன அஞ்சலி செலுத்துவதற்காக வரிசையில் நின்றபோது திடீரென மயங்கி விழுந்தார். சக அதிகாரிகள் அவரை உடனடியாக மீட்டு அருகில் உள்ள மருத்துவமனைக்குக் கொண்டு சென்றனர், ஆனால் அவர் ஏற்கனவே உயிரிழந்துவிட்டதாக மருத்துவர்கள் தெரிவித்தனர்.

பிரேதப் பரிசோதனையில் அவருக்கு ஏற்பட்ட கடுமையான நெஞ்சுவலி மற்றும் மாரடைப்பே உயிரிழப்பிற்குக் காரணம் என்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவர் திடீரென நிலைதடுமாறி கீழே விழும் காட்சிகள் சமூக வலைதளங்களில் வெளியாகி வைரலாகி வரும் நிலையில், நாட்டின் பாதுகாப்பிற்காக இறுதிவரை பணியாற்றிய அந்த அதிகாரியின் மறைவிற்கு அரசியல் தலைவர்களும், காவல்துறை உயர் அதிகாரிகளும் தங்களது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துள்ளனர். இந்தத் துயரச் சம்பவம் அவரது குடும்பத்தினர் மற்றும் சக காவலர்களிடையே மிகுந்த வேதனையை ஏற்படுத்தியுள்ளது.

Nanthini

Recent Posts

“இந்தியா எதையும் மன்னிக்காது!” – ஆப்ரேஷன் சிந்தூர் ஓராண்டு நிறைவு.. பாகிஸ்தானை அதிரவைத்த வீடியோவை வெளியிட்ட விமானப் படை..!!

'ஆபரேஷன் சிந்தூர்' ஓராண்டு நிறைவடைந்ததை ஒட்டி, இந்திய விமானப்படை (IAF) சமூக வலைதளத்தில் ஒரு சிறப்பு வீடியோவை வெளியிட்டுள்ளது. "இந்தியா…

2 minutes ago

போலி நம்பர் பிளேட்.. ஸ்கெட்ச் போட்டு தூக்கிய கூலிப்படை… மேற்கு வங்கத்தில் பாஜக பிரமுகர் கொலையில் அதிர வைக்கும் பின்னணி..!!

மேற்கு வங்க மாநிலம் மத்தியம்கிராம் பகுதியில் புதன்கிழமை இரவு சுமார் 10:30 மணியளவில் சந்திரநாத் ரத் தனது காரில் வீட்டிற்குச்…

12 minutes ago

உயிரைப் பறித்த தர்பூசணி… பாக்டீரியா தொற்று இல்லை என உறுதி.. அப்படியானால் உயிரிழப்புக்கு காரணம் என்ன? பெரும் அதிர்ச்சி..!!

மும்பையின் இஸ்மாயில் குர்தே சாலைப் பகுதியில் வசித்து வந்த அப்துல்லா டோகாடியா (40), அவரது மனைவி நஸ்ரீன் (35) மற்றும்…

16 minutes ago

நெஞ்சே பதறுது..!! மதிப்பெண் பட்டியலை திருத்தியதால் ஆத்திரம்.. 9 வயது மகளை மின்சார ரம்பத்தால் துண்டு துண்டாக வெட்டி கொன்ற தந்தை..!!

மகாராஷ்டிர மாநிலம் புனேவில், ஒன்பது வயது சிறுமி ஒருவரை அவரது தந்தையே மின்சார ரம்பத்தால் (Chainsaw) மிகக் கொடூரமாகக் கொலை…

32 minutes ago

திடீரென டெல்லி பறந்த சி.வி.சண்முகம்… பின்னணி என்ன..? உச்சகட்ட பரபரப்பில் தமிழகம்..!!

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிறகு ஆட்சியமைப்பதில் பெரும் இழுபறி நீடித்து வரும் நிலையில், அதிமுகவின் முக்கிய முகமும் எம்.பி.யுமான…

34 minutes ago

அதிர்ச்சி வீடியோ.. “உயிர் போயிடுச்சே” நோயாளி உயிரிழந்ததால் ஆத்திரமடைந்த உறவினர்கள் … அரசு மருத்துவமனையை அடித்து நொறுக்கிய கும்பல்..!!

மகாராட்டிர மாநிலம் உல்லாஸ்நகரில் உள்ள மத்திய அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்த நோயாளி ஒருவர் திடீரென உயிரிழந்தார். முறையான…

38 minutes ago