BREAKING: விஜய் பொதுக்கூட்டத்தில் போலீசார் தடியடி… பெரும் பதற்றம்..!!

By Soundarya on மார்கழி 9, 2025

Spread the love

பொதுக்கூட்டத்திற்கு 5,000 பேருக்கு மட்டுமே QR குறியீடுடன் கூடிய அனுமதிச் சீட்டு வழங்கப்பட்டிருந்த நிலையில், பலர் அனுமதி இல்லாமல் மைதானத்திற்குள் நுழைய முயன்றதால் கடும் நெரிசல் ஏற்பட்டது. நிலைமையைக் கட்டுப்படுத்த முடியாமல் போனதால், போலீசார் கூட்டத்தினரைக் கலைக்க லேசான தடியடி நடத்தினர். தவெக நிர்வாகிகள் ஒரு பாஸுக்கு  இரண்டு பேர் அனுமதிக்கப்படுவார்கள் என்று கூறியதாகவும், ஆனால் போலீசார் ஒருவருக்கு மட்டுமே அனுமதி என்று திட்டவட்டமாகக் கூறியதால், தொண்டர்களுக்கும் போலீசாருக்கும் இடையே வாக்குவாதம் ஏற்பட்டது.

கரூரில் நடந்த முந்தைய கூட்டத்தில் ஏற்பட்ட நெரிசல் சம்பவத்தைத் தொடர்ந்து, இந்தப் பொதுக்கூட்டத்திற்குப் போலீசார் கடுமையான கட்டுப்பாடுகளை விதித்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.