உஷார் மக்களே… உங்களுக்கும் இப்படி மெசேஜ் வந்துச்சா?… போலி இ-சலான் செயலி மூலம்… போனை ஹேக் செய்யும் மோசடி… வாகன ஓட்டிகளுக்கு போலீஸார் அதிரடி எச்சரிக்கை…!

By Swetha on புரட்டாதி 27, 2026

Spread the love

போக்குவரத்து அபராதம் விதிக்கப்பட்டுள்ளதாகக் கூறி, போலி குறுஞ்செய்திகள் மூலம் மக்களிடம் இருந்து தனிப்பட்ட தகவல்களைத் திருடும் புதிய ரக மோசடி பரவி வருகிறது. அரசால் அனுப்பப்படும் அதிகாரப்பூர்வ அறிவிப்பு போல தோற்றமளிக்கும் இக்குறுஞ்செய்திகளில், நிலுவையில் உள்ள அபராத விவரங்களுடன் ஒரு போலி இணையதள இணைப்பும் இணைக்கப்பட்டிருக்கும். இத்தகைய ஏமாற்று வேலைகள் குறித்து பொதுமக்கள் எச்சரிக்கையாக இருக்குமாறு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

அந்தப் போலி இணைப்பைத் சொடுக்கும்போது, அது உண்மையான அரசு இ-சலான் வலைத்தளம் போன்றே வடிவமைக்கப்பட்ட ஒரு போலிப் பக்கத்திற்கு உங்களை அழைத்துச் செல்லும். அங்கு, வாகனப் பதிவு எண் மற்றும் அபராத விவரங்களைச் சரிபார்க்க வேண்டுமெனில், குறிப்பிட்ட ஒரு செயலியை உடனடியாகப் பதிவிறக்கம் செய்ய வேண்டும் என பயனர்களுக்குத் திரையில் அறிவுறுத்தப்படும்.

   

பயனர்கள் அந்த போலி செயலியைப் பதிவிறக்கிய மறுநிமிடமே, மோசடி நபர்கள் உங்களது மொபைல் போனைத் தங்களின் முழுமையான கட்டுப்பாட்டுக்குள் கொண்டு வந்துவிடுவர். இதன் மூலம், உங்களது வங்கி விவரங்கள், புகைப்படங்கள் மற்றும் கடவுச்சொற்கள் போன்ற முக்கியமான தனிப்பட்டத் தகவல்களைத் திருடவும் தவறாகப் பயன்படுத்தவும் வழிவகுக்கும் என கேரளக் காவல் துறை எச்சரித்துள்ளது.