பகீர்… என் கல்யாணத்தையே நிறுத்துவியாடி?… ரூ 3 லட்சத்தை கேட்டதற்கு தம்பதியை… போட்டுத்தள்ளிய போலீஸ் ஏட்டு… நெஞ்சை உலுக்கும் அதிர்ச்சி சம்பவம்…!

Spread the love

சூரியபேட்டை மாவட்டத்தில் கணவன்-மனைவி படுகொலை செய்யப்பட்ட வழக்கில், காவல் துறை காவலரே கொலையாளி என்ற அதிர்ச்சி உண்மை வெளிவந்துள்ளது. பிக்யாத்தண்டாவைச் சேர்ந்த ஹாலாவத் நாகுலு மற்றும் அவரது மனைவி பூபாலு ஆகியோரின் மகள் குடும்ப தகராறு தொடர்பாக காவல் நிலையம் சென்றபோது, காவலர் ஷரீஃப் என்பவருடன் பூபாலுவுக்குப் பழக்கம் ஏற்பட்டு அது கள்ளக்காதலாக மாறியுள்ளது. இதற்கிடையே, பூபாலு தனது மருமகனுக்குக் கொடுக்க வேண்டும் என்று கேட்டதால், ஷரீஃப் அவருக்கு ரூ 3 லட்சம் கடன் கொடுத்துள்ளார்.

காவலர் ஷரீஃபுக்கு திருமணம் நிச்சயிக்கப்பட்ட நிலையில், தான் கொடுத்த பணத்தைத் திருப்பித் தருமாறு பூபாலுவிடம் கேட்டுள்ளார். ஆனால், பணத்தைக் கொடுக்க மறுத்த பூபாலு, ஷரீஃபின் கள்ளக்காதல் விவகாரத்தைச் நிச்சயக்கப்பட்ட பெண்ணிடம் கூறி விடுவதாக மிரட்டியுள்ளார். இதனால் ஆத்திரமடைந்த ஷரீஃப், தன் திருமண வாழ்க்கை பாழாகிவிடும் என்ற பயத்தில் கணவன்-மனைவி இருவரையும் தீர்த்துக்கட்ட சதித்திட்டம் தீட்டினார்.

ஆடுகளை விற்ற கடனைத் திருப்பித் தருவதாகக் கூறி நாகுலு மற்றும் பூபாலுவை ஒரு தனிமையான இடத்திற்கு வரவழைத்த ஷரீஃப், அவர்களைத் தடியால் அடித்துக் கொடூரமாகக் கொலை செய்தார். கொலை செய்த பிறகு ஒன்றும் அறியாதவர் போலப் பணிக்குச் சென்ற ஷரீஃப், அதிகாரிகளுடன் சேர்ந்து சம்பவ இடத்தைப் பார்வையிடவும் வந்துள்ளார். எனினும், தொழில்நுட்ப சான்றுகளின் அடிப்படையில் ஷரீஃபுக்கு உதவிய சுந்தர் என்பவரைப் பிடித்து விசாரித்தபோது, காவலர் ஷரீஃப் தான் இந்த இரட்டைக் கொலையைச் செய்தார் என்ற உண்மை அம்பலமானது.

Swetha

Recent Posts

“தோளில் கைபோட்டு செல்பி…” நடிகை ரச்சிதா ராமுவிடம் அத்துமீறிய நபர்…. மேடையில் பரபரப்பு… வைரலாகும் ஷாக்கிங் வீடியோ…!!

கர்நாடக மாநிலம் துமகூரு நகரில் உள்ள ஜூனியர் கல்லூரி மைதானத்தில் நடைபெற்ற தசரா விழாவில் கலந்துகொண்ட பிரபல கன்னட நடிகை…

6 minutes ago

“என் மகளுக்கு ஏன் இந்த அநீதி?”… விவசாயி வெளியிட்ட பகீர் வீடியோ… கண்ணீரில் கரையும் குடும்பம்… நடுங்க வைக்கும் உண்மை…!!

மகாராஷ்டிர மாநிலம் நாந்தேடு மாவட்டத்திலுள்ள போர்கோன் கிராமத்தைச் சேர்ந்த 46 வயதான சங்கர் அப்பாராவ் கிஷிர்சாகர் என்ற விவசாயி, சோயாபீன்…

8 minutes ago

“சண்டை போடாதீங்க…” போலீஸ் அதிகாரிகளை கத்தியால் குத்திய கும்பல்…. தகராறை தடுக்க முயன்ற போது வெறிச்செயல்…. பகீர் வீடியோ…!!

கேரள மாநிலம் கொச்சி வைப்பின் பகுதியில், தனியார் பேருந்து ஊழியர்களுக்கும் உள்ளூர் கும்பலுக்கும் இடையே ஏற்பட்ட மோதலைக் கட்டுப்படுத்த முயன்ற…

17 minutes ago

மின்னல் வேகத்தில் வந்து மோதிய லாரி… கார் சுக்குநூறாகி 4 வாலிபர்கள் துடிதுடித்து பலி… 3 பேர் படுகாயம்… வைரலாகும் திக் திக் வீடியோ…!!

மகாராஷ்டிரா மாநிலம் சத்தாரா மாவட்டம் கராத் அருகே, புனே - பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் புதிதாகத் திறக்கப்பட்ட ஆறு வழி…

39 minutes ago

“யாரோ பின்னாடி வராங்க…” 4 நாட்களாக தொடர்ந்த தொந்தரவு… இளம் வழக்கறிஞர் எடுத்த முடிவால் கதறும் குடும்பத்தினர்…. பரபரப்பு சம்பவம்…!!

தெலுங்கானா மாநிலம் கம்மம் மாவட்டம் ரகுநாதபாளம் மண்டலம் வி. வெங்கடாயபாலம் கிராமத்தில், செல்போன் மிரட்டல் மற்றும் தொடர் தொல்லைகளால் மனவேதனை…

53 minutes ago

“விஜய் கூப்பிட்டா அரசியலுக்கு போவேன்”….. இன்ஸ்டா ‘வாட்டர் மெலன் ஸ்டார்’ திவாகரின் அதிரடி பேட்டி….!

மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் இன்ஸ்டா பிரபலம் 'வாட்டர் மெலன் ஸ்டார்' திவாகர் செய்தியாளர்களைச் சந்தித்துப் பேசியவை தற்போது சமூக…

2 மணத்தியாலங்கள் ago