தொடரும் பரபரப்பு… கரூர் துயர சம்பவம்: காவல்துறை புதிய விளக்கம்..!

By Nanthini on புரட்டாதி 28, 2025

Spread the love

தமிழகத்தில் 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நெருங்கிக் கொண்டிருக்கும் சூழலில் தமிழக வெற்றி கழகம் கட்சியின் தலைவர் விஜய் தனது தேர்தல் பிரச்சாரத்தை தொடங்கியுள்ளார். அதன்படி நேற்று நாமக்கல் மற்றும் கரூரில் விஜய் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார். நேற்று மதியம் நாமக்கல் மாவட்டத்தில் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்ட விஜய் இரவை எட்டு மணி அளவில் கரூரில் தேர்தல் பிரச்சாரம் செய்தார். தேர்தல் பிரச்சாரம் முடிந்த சிறிது நேரத்தில் கரூரில் கூட்ட நெரிசலில் சிக்கி அடுத்தடுத்து மக்கள் மயங்கி விழுந்தனர். உடனே ஆம்புலன்ஸ் மூலமாக அனைவரும் மருத்துவமனைக்கு அழைத்துச் செல்லப்பட்ட நிலையில் இதுவரை 40 பேர் உயிரிழந்துள்ளனர்.

இதில் பத்து பேர் குழந்தைகளும் அடங்குவர். இந்த சம்பவம் இந்தியா முழுவதும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. அரசு சார்பில் 10 லட்சம் ரூபாய் உயிரிழந்தவர்களுக்கு நிவாரணம் அறிவிக்கப்பட்டுள்ள நிலையில் விஜய் 20 லட்சம் ரூபாய் நிவாரணம் அறிவித்துள்ளார். இதனைத் தொடர்ந்து இந்த சம்பவம் குறித்து வழக்கு விசாரணை தொடங்கியுள்ளது. இந்நிலையில் கரூர் லைட் ஹவுஸ் ரவுண்டானா பகுதியில் பிரச்சாரத்திற்கு அனுமதி வழங்கப்படாதது குறித்து ஏடிஜிபி டேவிட்சன் ஆசீர்வாதம் விளக்கமளித்துள்ளார். ரவுண்டானா பகுதி மிகவும் குறுகலான இடம் என்பதாலும் அமராவதி ஆறு அருகில் இருப்பதாலும் வேலுச்சாமி புறத்தில் அனுமதியை வழங்கப்பட்டதாக கூறியுள்ளார். மேலும் நாமக்கல்லை விட கரூரில் கூடுதலாகஈடுபட்டதாகவும் அவர் விளக்கம் அளித்துள்ளார்.