உத்திரபிரதேச மாநிலத்தைச் சேர்ந்த இளம் பெண் உதயகுமாரி. இவருக்கு கடந்த 26 ஆம் தேதி திருமணம் நடக்க இருந்த.து இதற்கிடையில் கடந்த ஏப்ரல் 24 ஆம் தேதி அன்று உதயகுமாரியின் வீட்டில் கொள்ளையர்கள் நுழைந்து திருமணத்திற்கு வைத்திருந்த நகை பணத்தை கொள்ளையடித்து சென்றுள்ளார்கள். கொள்ளையை தடுக்க முயன்ற உதயகுமாரின் சகோதரரை கொள்ளையர்கள் துப்பாக்கியால் சுட்டுக் கொன்றுள்ளார்கள். இந்த சம்பவம் தொடர்பாக வழக்கு பதிவு செய்த காவல்துறையினர் கொள்ளையில் ஈடுபட்ட கும்பலின் தலைவனை என்கவுண்டரில் சுட்டுக் கொன்று விட்டார்கள்.
ஆனால் வீட்டில் கொள்ளையடிக்கப்பட்டதாலும், தன்னுடைய சகோதரன் சுட்டுக் கொல்லப்பட்டதாலும் உதயகுமாரியின் திருமணம் தடைப்பட்டு நின்றுள்ளது. இதனை அறிந்த மாவட்ட எஸ்பி வினீத் ஜெய்ஸ்வால் மணமகன் மற்றும் மணமகள் குடும்பத்தாரிடம் பேச்சுவார்த்தை நடத்தி இரு தரப்பும் சமாதானமான நிலையில் உதயகுமாரிக்கு நேற்று திருமணம் நடத்தி வைத்துள்ளார்கள். மற்றும் அப்பெண்ணுக்கு ரூ.1.51 லட்சம் பணம், நகைகள் மற்றும் சீர்வரிசைகளையும் செய்து திருமணத்தை நடத்தி முடித்துள்ளனர். இது அப்பெண்னின் குடும்பத்தினரையும், ஊர் மக்களையும் நெகிழ்ச்சியில் ஆழ்த்தியுள்ளது.
உத்தரபிரதேசத்தின் பிஜ்னோரில் பாம்பு கடித்த ஒருவர், உயிருள்ள பாம்பைப் பிடித்து, சீக்கிரம் அடையாளம் காண மருத்துவமனைக்கு எடுத்துச் சென்று, தனது…
குஜராத்தின் அர்வல்லி மாவட்டத்தில் உள்ள மொடசா நகரம் அருகே செவ்வாய்க்கிழமை அதிகாலையில் ஆம்புலன்ஸ் தீப்பிடித்து எரிந்ததில், புதிதாகப் பிறந்த குழந்தை,…
நலன் காக்கும் ஸ்டாலின்" திட்டம் என்பது, தமிழ்நாட்டில் உள்ள ஏழை மற்றும் பின்தங்கிய மக்களுக்கு அவர்களின் வசிப்பிடங்களுக்கு அருகிலேயே இலவச…
சென்னை மாவட்டத்தில் உள்ள முன்னாள் கிரிக்கெட் வீரர் தினேஷ் கார்த்திக்கின் வீட்டின் அருகே சடலம் மீட்கப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.…
விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அருகே உள்ள துத்திப்பட்டு கிராமத்தை சேர்ந்த வெங்கடேசன்(42) என்பவருடைய மகள் சூரிய பிரியா (17). இவர்…
தமிழகத்தில் தற்போது வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில் பல்வேறு மாவட்டங்களிலும் தொடர்ந்து பரவலாக மழை பெய்து வருகிறது. இதனிடையே வங்க…