மதுரை பைபாஸ் சாலையில் உள்ள ‘தனிஷ்க்’ நகைக்கடையில் நவம்பர் 11-ஆம் தேதி நள்ளிரவு பூட்டை உடைத்து, பல கோடி ரூபாய் மதிப்பிலான தங்கம் மற்றும் வைர நகைகள் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்தத் துணிகரக் கொள்ளையில் ஈடுபட்டதாக இன்ஸ்டாகிராம் பிரபலமான நிஷாந்த், அவரது தந்தை சுரேஷ் மற்றும் ‘டெக் பாஸ்’ யூடியூப் சேனல் தொகுப்பாளரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான மீனாட்சி நாச்சியார் ஆகியோரை போலீசார் கைது செய்துள்ளனர். முன்னதாக, மீனாட்சி அளித்த தகவலின் பேரில், மாடக்குளம் கபாலீஸ்வரி அம்மன் கோயில் மலையடிவாரத்தில் உள்ள நிஷாந்திற்குச் சொந்தமான நிலத்தில் புதைத்து வைக்கப்பட்டிருந்த 5 கிலோ நகைகளை போலீசார் மீட்டிருந்தனர்.
இந்நிலையில், தலைமறைவாக இருந்த முக்கியக் குற்றவாளியான நிஷாந்த், ஆம்னி பேருந்து ஓட்டுநர் அளித்த தகவலின் உதவியுடன் தருமபுரியில் இன்று போலீசாரால் கைது செய்யப்பட்டார். அதியமான்கோட்டை காவல் நிலையத்தில் வைத்து அவரிடம் தனிப்படை போலீசார் சுமார் 4 மணி நேரம் தீவிர விசாரணை நடத்தினர். இந்த விசாரணையின்போது நிஷாந்த் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில், பலத்த பாதுகாப்புடன் அவர் மதுரைக்கு அழைத்து வரப்பட்டார்.
நிஷாந்த் கொடுத்த தகவல்களின் பேரில், திருடிய நகைகளை மேலும் பதுக்கி வைத்திருக்கலாம் என்ற சந்தேகத்தில் மதுரை திருப்பாலையில் உள்ள யூடியூபர் மீனாட்சி நாச்சியாரின் வீட்டில் தனிப்படை போலீசார் இன்று அதிரடி சோதனை நடத்தினர். அப்போது வீட்டிலிருந்த மீனாட்சியின் தாயாரும் இன்ஸ்டாகிராம் பிரபலமுமான இந்துவிடமும் போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர்.
இதேபோல், நிஷாந்தின் வீட்டிலும் மற்றொரு தனிப்படை போலீசார் மீண்டும் சோதனை நடத்தியதில், அங்கிருந்து ஒரு லேப்டாப் மற்றும் டம்மி துப்பாக்கி (Dummy Pistol) ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. பறிமுதல் செய்யப்பட்ட லேப்டாப்பை சைபர் கிரைம் போலீசார் ஆய்வு செய்து வரும் நிலையில், மீதமுள்ள நகைகளை மீட்கும் பணியிலும், இந்தக் கொள்ளையில் வேறு யாருக்கேனும் தொடர்புள்ளதா என்பது குறித்தும் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
உத்தரப் பிரதேச மாநிலம் கோண்டாவில், மாமியாரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு ஆற்றங்கரையில் முகம் கழுவச் சென்ற மருமகனை ராட்சத முதலை…
அசாம் மாநிலம் திப்ருகரில் ஆன்லைன் விளையாட்டில் ரூ.4 லட்சம் பணத்தை இழந்த வாடகைதாரர் ஒருவர், தனது கடனை அடைப்பதற்காக வீட்டின்…
மகாராஷ்டிர மாநிலம் சத்ரபதி சம்பாஜிநகர் மாவட்டத்திலுள்ள பைதான் பகுதியில், பெற்ற தந்தையே தனது இரண்டு மகன்களைக் கால்வாயில் வீசிய கொடூரச்…
அமெரிக்காவின் புளோரிடா மாகாணத்தில் உள்ள பள்ளியில் தற்காலிக ஆசிரியராகப் பணியாற்றிய மியா அசெவெடோ கல்லார்டோ (20) என்பவர், 17 வயது…
பீகார் மாநிலம் பெட்டியாவில் பட்டப்பகலில் பிரபல நகைக்கடைக்குள் துப்பாக்கியுடன் புகுந்த 6 முதல் 8 பேர் கொண்ட மர்ம கும்பல்,…
திருநெல்வேலி மாவட்டம் முன்னீர்பள்ளம் பகுதியில் 80 வயது மூதாட்டி ஒருவர் நவம்பர் 16-ஆம் தேதி அதிகாலை 5.45 மணியளவில் இயற்கை…