உடனடி கைது?…. உதயநிதி வரிசையில் நயினார் நாகேந்திரன்…. CM விஜய் வழக்கில் திடீர் திருப்பம்…. அடுத்த பரபரப்பு….!

By Nanthini on ஆவணி 15, 2026

Spread the love

தமிழக வெற்றிக் கழகத்தின் தலைவரும் முதல்வருமான விஜய்யைக் குறித்து அநாகரிகமாகவும், அவதூறான வகையிலும் பேசியதாகக் கூறி, பாரதிய ஜனதா கட்சியின் சட்டமன்றக் குழுத் தலைவரும் மாநிலத் துணைத் தலைவருமான நயினார் நாகேந்திரன் மீது பெண் வழக்கறிஞர் ஒருவர் காவல் துறை தலைமை இயக்குநரிடம் இணையவழி வாயிலாக புகார் மனு அளித்துள்ளார். அந்த மனுவில், சட்டம் மற்றும் ஒழுங்கைச் சீர்குலைக்கும் வகையில் செயல்பட்ட நயினார் நாகேந்திரன் மீது கடுமையான குற்றவியல் நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

சமீபத்தில் தமிழக முதல்வரையும், பெண்களையும் அவதூறாகப் பேசிய குற்றச்சாட்டின் பேரிலேயே அண்மையில் பாஜக பிரமுகர் ஒருவர் கைது செய்யப்பட்ட நிலையில், அதே சட்டப் பிரிவுகளின் கீழ் நடவடிக்கை எடுக்கக் கோரப்பட்டுள்ளதால், நயினார் நாகேந்திரனும் விரைவில் கைது செய்யப்படலாம் என்ற தகவல்கள் வெளியாகி அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளன.