ஒரு பொண்ண இருந்துகிட்டு இப்படி பண்ணலாமா?… அக்கா நம்பி வந்த… சிறுமிக்கு நேர்ந்த கொடூரம்… யாருகிட்டையாது சொன்ன கொன்னுடுவேன்… தாயிடம் கதறிய சிறுமி… வெளிவந்த பகீர் உண்மை…!

By Visaka on ஆடி 23, 2026

Spread the love

பெங்களூரின் வடகிழக்கு பகுதியில் அமைந்துள்ள தேவநஹள்ளியில் 15 வயது சிறுமி பாலியல் வன்கொடுமை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக, ஒரு பெண் உட்பட மூன்று பேரை காவல்துறையினர் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்டவர்களில் ஆட்டோ ஓட்டுநரான நவீன் குமார் மற்றும் தினக்கூலி தொழிலாளியான வெங்கடரமணா ஆகிய இருவரும் சிறுமியை பாலியல் வன்கொடுமை செய்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளனர். அதே பகுதியைச் சேர்ந்த ரேணுகா என்ற மற்றொரு தினக்கூலி தொழிலாளி, சிறுமியை ஆசைகாட்டி ஏமாற்றி இவ்விருவரிடமும் ஒப்படைத்த குற்றத்திற்காகக் கைது செய்யப்பட்டுள்ளார். நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட மூவரும் தற்போது பெங்களூரு மத்திய சிறையில் அடைக்கப்பட்டுள்ளனர்.

https://twitter.com/HateDetectors/status/2080175264395669601/photo/1

   

கடந்த ஜூலை 17-ஆம் தேதி இரவன்று, ரேணுகா சிறுமியின் வீட்டிற்குச் சென்று அருகில் உள்ள கோவிலுக்கு வருமாறு அழைத்துள்ளார். ரேணுகாவுடன் முன்பு பலமுறை கோவிலுக்குச் சென்றுள்ளதால், சிறுமியும் எவ்வித சந்தேகமும் இன்றி அவருடன் சென்றுள்ளார். ஆனால், அவரை கோவிலுக்கு அழைத்துச் செல்லாமல் தேவநஹள்ளி பேருந்து நிலையத்திற்கு அழைத்துச் சென்று, அங்கு காத்திருந்த நவீன் மற்றும் வெங்கடரமணாவிடம் ரேணுகா ஒப்படைத்துள்ளார். அங்குள்ள குவாரிக்கு அருகிலுள்ள பாழடைந்த இடத்திற்குச் சிறுமியை வலுக்கட்டாயமாக அழைத்துச் சென்று, மது குடிக்க வைத்து இருவரும் கொடூரமாக பாலியல் வன்கொடுமை செய்துள்ளனர். இச்சம்பவம் குறித்து வெளியே கூறக்கூடாது என மிரட்டிவிட்டு ரேணுகா சிறுமியை மீண்டும் வீட்டில் விட்டுச் சென்றுள்ளார். உடல் வேதனையைத் தாங்க முடியாமல் இரு நாட்களுக்குப் பிறகு சிறுமி தனது தாயாரிடம் உண்மையைக் கூறியதை அடுத்து, தாயார் அளித்த புகாரின் பேரில் காவல் துறையினர் இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொண்டுள்ளனர்.