கோவளம் ரிசார்ட்டில் ரகசிய ரூம்…! சினிமா பாணியில் பல் டாக்டரை தூக்கிய போலீஸ்…. ரூ.11 லட்சத்தில் வந்த வினை… பகீர் சம்பவம்…!!

By Devi Ramu on பங்குனி 7, 2026

Spread the love

சென்னையில் நிலம் தொடர்பான பண விவகாரத்தில் பல் மருத்துவர் ஒருவர் ஆட்களை வைத்து நிலத் தரகரைக் கடத்திய சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ராமாபுரத்தைச் சேர்ந்த அனில்குமார் என்பவர், கேளம்பாக்கத்தில் உள்ள ஒரு காலி மனையை விற்பனை செய்ய திருப்போரூர் மருத்துவர் பவாவிடம் ரூ.11 லட்சம் முன்பணம் பெற்றுள்ளார்.

ஆனால், பத்திரப் பதிவின் போது ஆவணங்களில் குளறுபடி இருந்ததால் நிலத்தைப் பதிவு செய்ய அதிகாரிகள் மறுத்துவிட்டனர். இதனால் ஆத்திரமடைந்த மருத்துவர், தனது பணத்தைத் திரும்பக் கேட்டு அனில்குமாரை ஒரு கும்பலுடன் சேர்ந்து காரில் கடத்திச் சென்று கோவளம் ரிசார்ட் ஒன்றில் அடைத்து வைத்துத் தாக்கியுள்ளார்.

   

கடத்தப்பட்ட அனில்குமாரின் உறவினர்கள் அளித்த புகாரின் பேரில், காவல்துறையினர் செல்போன் சிக்னலை வைத்துத் தீவிர தேடுதல் வேட்டை நடத்தினர். ரிசார்ட்டில் இருந்த அனில்குமாரை பத்திரமாக மீட்ட போலீசார், கடத்தலில் ஈடுபட்ட பல் மருத்துவர் பவா மற்றும் அவரது சகோதரர்கள் உட்பட மொத்தம் 9 பேரைக் கைது செய்தனர்.

   

இவர்களிடமிருந்து கடத்தலுக்குப் பயன்படுத்தப்பட்ட இரண்டு ஆடம்பர கார்கள் பறிமுதல் செய்யப்பட்டன. நிலப் பிரச்சனையில் ஏற்பட்ட மோதல், நன்கு படித்த ஒரு மருத்துவரையே கடத்தல் குற்றவாளியாக மாற்றியிருப்பது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. மேலும் தப்பியோடிய 8 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.