கேரளாவில் அதிர்ச்சி…. 11 வயது சிறுவனை வன்கொடுமை செய்த இன்ஸ்டா பிரபலம் நிஷா ரபேல்…. வெளிவந்த திடுக்கிடும் உண்மை….!

By Nanthini on ஐப்பசி 8, 2026

Spread the love

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் நாளுக்கு நாள் அதிகரித்து வருவது சமூகத்தில் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தி வருகிறது. குறிப்பாக, முதியவர்கள் மற்றும் செல்வாக்கு மிக்க நபர்கள் சிறுமிகளை இலக்காகக் கொண்டு பாலியல் வன்கொடுமை மற்றும் சீண்டல்களில் ஈடுபடும் சம்பவங்கள் தமிழ்நாட்டில் தொடர்ந்து அரங்கேறி வருகின்றன. அந்த வகையில், பல சிறுமிகளைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கிய தொழிலதிபர் வீரமணி போன்றோர் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்படுவது அதிகரித்து வரும் குற்றங்களுக்குச் சான்றாக உள்ளது.

இதற்கிடையில், பெண்களால் சிறுவர்கள் பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்படும் அதிர்ச்சிகரமான சம்பவங்களும் இந்தியாவில் அவ்வப்போது பதிவாகி வருகின்றன. கேரளாவில் இன்ஸ்டாகிராம் பிரபலமாக வலம் வந்த நிஷா ரபேல் என்பவர், 11 வயது சிறுவனைப் பாலியல் வன்கொடுமை செய்த புகாரில் சிக்கியுள்ளது இந்த விவகாரத்திற்கு மற்றுமொரு பரிமாணத்தைக் கொடுத்துள்ளது. பாதிக்கப்பட்ட சிறுவனுக்கு நடத்தப்பட்ட மருத்துவப் பரிசோதனையில் அவர் வன்கொடுமை செய்யப்பட்டது உறுதியானதை அடுத்து, திருச்சூர் மேற்கு காவல் நிலைய போலீசார் அவர் மீது போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்து விசாரணையைத் தீவிரப்படுத்தியுள்ளனர்.

   

குழந்தைகளுக்கு எதிரான பாலியல் குற்றங்கள் பாலின பேதமின்றி அனைத்துத் தரப்பிலும் அரங்கேறி வருவது சமுதாயத்தின் பாதுகாப்புக் கட்டமைப்பைக் கேள்விக்குறியாக்குகிறது. இத்தகைய கொடூரச் செயல்களில் ஈடுபடுபவர்கள் மீது சம்மந்தப்பட்ட சட்டங்கள் கடுமையாக அமல்படுத்தப்பட வேண்டும். மேலும், பெற்றோர்கள் தங்களது குழந்தைகளின் நடத்தை மற்றும் பாதுகாப்பு குறித்து அதிக விழிப்புணர்வுடன் இருக்க வேண்டியது தற்காலச் சூழலில் அவசியமான ஒன்றாகும்.