தமிழக அரசியலில் அடுத்த பரபரப்பு…. பாமக-விலிருந்து பிரிந்து புதிய கட்சி?… அருள் எடுத்த அதிர்ச்சி முடிவு…. ராமதாஸ் – அன்புமணி இணைப்பால் திடீர் பூகம்பம்….!

By Nanthini on ஆடி 16, 2026

Spread the love

பாமகவில் ராமதாஸ் மற்றும் அன்புமணி ராமதாஸ் ஆகியோருக்கு இடையே மீண்டும் சுமுக உறவு ஏற்பட்டுள்ள நிலையில், இதனால் கடும் அதிருப்தியில் இருக்கும் கட்சியின் முக்கிய நிர்வாகியான அருள், தனிக்கட்சி தொடங்க திட்டமிட்டுள்ளதாக அரசியல் வட்டாரங்களில் தகவல் வெளியாகியுள்ளது.

முன்னதாக பாமகவில் பிளவு ஏற்பட்ட காலகட்டத்தில் ராமதாஸின் தீவிர ஆதரவாளராகச் செயல்பட்ட அருள், அன்புமணிக்கு எதிராகக் கடுமையான எதிர்ப்பை வெளிப்படுத்தி வந்தவர் ஆவார். தற்போது கட்சியில் அன்புமணியின் ஆதிக்கமும் செல்வாக்கும் பெருமளவில் ஓங்கியிருக்கும் என்பதால், அதிருப்தியடைந்த அருள் தனியாகப் பிரிந்து புதிய கட்சியைத் தொடங்கும் முடிவுக்கு வந்துள்ளதாகவும், இதற்கு அவரது ஆதரவாளர்களும் முழுமனதாகப் பச்சைக் கொடி காட்டிவிட்டதாகவும் கூறப்படுகிறது. இந்த நகர்வு தமிழக அரசியல் களத்தில், குறிப்பாக வட மாவட்டங்களில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.