BREAKING: விஜய்க்கு பாமக ஆதரவு?… சற்றுமுன் ஒரே போடாய் போட்ட அன்புமணி…!

By Nanthini on வைகாசி 6, 2026

Spread the love

தமிழக சட்டமன்றத் தேர்தல் முடிவுகளுக்குப் பிந்தைய அரசியல் நகர்வுகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் (தவெக) ஆட்சியமைக்க பாமக ஆதரவு அளிக்குமா என்ற எதிர்பார்ப்பு அரசியல் வட்டாரத்தில் பெரும் பேசுபொருளாகியுள்ளது. இது குறித்து ஆலோசிப்பதற்காக பனையூரில் உள்ள பாமக அலுவலகத்தில் அக்கட்சியின் எம்.எல்.ஏ-க்கள் மற்றும் முக்கிய நிர்வாகிகளுடன் அன்புமணி ராமதாஸ் தீவிர ஆலோசனையில் ஈடுபட்டார்.

ஆலோசனைக்குப் பிறகு வெளியே வந்த அவரிடம், தவெக-வுக்கு ஆதரவு அளிப்பீர்களா என்று செய்தியாளர்கள் கேள்வி எழுப்பியபோது, அதற்கு நேரடியாகப் பதிலளிக்காமல் “நன்றி, வணக்கம்” எனக் கூறி மழுப்பலாகச் சிரித்தபடியே அங்கிருந்து புறப்பட்டுச் சென்றார். ஆதரவு நிலைப்பாடு குறித்து அவர் மறுப்பு தெரிவிக்காமல் தவிர்த்துச் சென்றது, தவெக மற்றும் பாமக இடையே திரைமறைவில் ஏதேனும் கூட்டணி உடன்பாடுகள் எட்டப்பட வாய்ப்புள்ளதோ என்ற பலத்த விவாதத்தை கிளப்பியுள்ளது.