“பாமக கூட்டணி…. திடீரென யூடர்ன் அடித்த ராமதாஸ்”… செம ஷாக்கில் விஜய்…. தமிழக அரசியலில் அதிரடி திருப்பம்…..!

By Nanthini on மாசி 26, 2026

Spread the love

தமிழக அரசியல் களத்தில் 2026 சட்டமன்றத் தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், பாட்டாளி மக்கள் கட்சியின் நிறுவனர் டாக்டர் ராமதாஸின் சமீபத்திய அறிவிப்பு பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதுவரை எந்தக் கூட்டணியிலும் இணையாமல் மௌனம் காத்து வந்த ராமதாஸ், தற்போது திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி அமைப்பதற்கான சமிக்ஞையை வெளிப்படுத்தியுள்ளார். இது தமிழக அரசியலில், குறிப்பாக விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்துடன்  அவர் கூட்டணி அமைப்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட சூழலில் ஒரு முக்கிய திருப்பமாகப் பார்க்கப்படுகிறது.

தற்போது பாட்டாளி மக்கள் கட்சிக்குள் உட்கட்சிப் பூசல் நிலவி வரும் நிலையில், அன்புமணி ராமதாஸ் தரப்பு ஏற்கனவே தேசிய ஜனநாயகக் கூட்டணியில் (NDA) அங்கம் வகிக்கிறது. ஆனால், ராமதாஸ் தலைமையிலான அணி இதுவரை தனித்தே முடிவெடுத்து வந்தது. தொடக்கத்தில் ராமதாஸ் தரப்பு திமுக-வுடன் பேச்சுவார்த்தை நடத்தியதாகக் கூறப்பட்டாலும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் கடும் எதிர்ப்பு காரணமாக அந்த முயற்சி கைகூடவில்லை எனத் தெரிகிறது. இதன் காரணமாகவே அவர் தவெக பக்கம் சாயக்கூடும் என அரசியல் நோக்கர்கள் கணித்திருந்தனர்.

   

தைலாபுரத்தில் இன்று தனது ஆதரவாளர்களுடன் ஆலோசனை நடத்திய பின் செய்தியாளர்களைச் சந்தித்த ராமதாஸ், “திராவிடக் கட்சிகளுடன் கூட்டணி இருக்குமா?” என்ற கேள்விக்கு “இருக்கும்” என்று சுருக்கமாகப் பதிலளித்தார். இதன் மூலம் அவர் தவெக போன்ற புதிய கட்சிகளை விட, அனுபவம் வாய்ந்த திராவிடக் கட்சிகளுக்கே முன்னுரிமை அளிக்கத் திட்டமிட்டுள்ளது உறுதியாகியுள்ளது. எனினும், தனது இறுதியான முடிவை அறிவிக்க இன்னும் காலம் கனியவில்லை என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

   

கூட்டணி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பை வரும் பிப்ரவரி 28-ஆம் தேதி வெளியிடப் போவதாக ராமதாஸ் அறிவித்துள்ளார். அவர் திமுக அல்லது அதிமுக ஆகிய இரு கட்சிகளில் யாருடன் கைகோர்ப்பார் என்பது இப்போது மில்லியன் டாலர் கேள்வியாக உருவெடுத்துள்ளது. அன்புமணி தரப்பு அதிமுக கூட்டணியில் இணைய வாய்ப்புள்ளதாகப் பேசப்படும் நிலையில், ராமதாஸின் இந்த ‘யு-டர்ன்’ தமிழக தேர்தல் களத்தில் புதிய கூட்டணிக் கணக்குகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.