அதிரடியாக மாறப்போகும் திமுக கூட்டணி… பக்காவாக காய் நகர்த்தும் முதல்வர் ஸ்டாலின்.. ஸ்கெட்ச் இவருக்கு தானா..?

By Nanthini on ஆனி 28, 2025

Spread the love

தமிழகத்தில் தற்போது முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடந்து கொண்டிருக்கும் நிலையில் இவர்களுடைய ஆட்சிக்காலம் இன்னும் ஓராண்டில் நிறைவடைய உள்ளது. 2026 ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் மீண்டும் திமுக ஆட்சியைப் பிடிக்க வேண்டும் என்பதில் திமுக உறுதியாக உள்ளது. இதனைத் தொடர்ந்து தேர்தலுக்கான வேலைகளை தற்போதைய முதல்வர் ஸ்டாலின் தொடங்கியுள்ளார். 2026 தேர்தலை முன்னிட்டு திமுகவில் அடுத்தடுத்து பல்வேறு அதிரடி மாற்றங்கள் நிகழ்ந்து வருகின்றது.

இப்படியான நிலையில் 2026 தேர்தல் பல விசித்திரங்களை சந்திக்கும் என்று அரசியல் விமர்சகர்கள் கூறுகின்றனர். குறிப்பாக பாஜகவுடன் நெருக்கம் காட்டி வரும் அன்புமணி திமுகவை தொடர்ந்து அட்டாக் செய்கின்றார். அதே நேரம் ராமதாஸ் திமுகவுடன் நெருக்கம் காட்டி வருகின்றார். இதனால் திருமாவை சமாதானம் செய்து கொண்டே ராமதாஸுக்கு திமுக தூது விட்டிருப்பதாகவும் 2026 இல் திமுக கூட்டணியில் அதிரடி மாற்றம் நிகழும் என்றும் கூறப்படுகிறது.