தமிழக அரசியலில் புதிய கூட்டணிக் கணக்குகள் சூடுபிடித்துள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகத்துடன் விடுதலைச் சிறுத்தைகள் கட்சி கூட்டணியை உறுதி செய்திருப்பது பாமகவுக்கு பெரும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. முன்னதாக, விசிக தலைவர் தொல். திருமாவளவன் கூட்டணி குறித்த தெளிவான முடிவை வெளிப்படுத்தாமல் இருந்த தருணத்தில், பாமகவை தங்கள் பக்கம் இழுக்கத் தவெக தரப்பில் பல்வேறு காய்நகர்த்தல்கள் மேற்கொள்ளப்பட்டதாகவும், அவர்களுக்குத் ‘தகைசால் தமிழர்’ விருது அறிவிக்கப்பட்டதும் அந்த கூட்டணி முயற்சியின் ஒரு பகுதியே என்றும் அரசியல் வட்டாரங்களில் பேசப்பட்டது.
இந்தத் திட்டத்தை முன்கூட்டியே கணித்த திருமாவளவன், தவெகவுடனான கூட்டணியை வெளிப்படையாக அறிவித்து பாமகவின் நகர்வுக்கு முற்றுப்புள்ளி வைத்துள்ளதாகவும், இதனால் தவெக கூட்டணியில் இணைந்து சௌமியா அன்புமணியை அமைச்சராக்கலாம் என்ற பாமகவின் எதிர்பார்ப்பு மற்றும் கனவு முற்றிலுமாக கலைந்துவிட்டதாகவும் கூறப்படுகிறது.
