தமிழகத்தில் இன்னும் சில மாதங்களில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளதால் அனைத்து கட்சிகளும் கூட்டணி வியூகம் மற்றும் தொகுதி பங்கீடு என பரபரப்பாக செயல்பட்டு வருகின்றன. சிறிய கட்சிகள் தொடங்கி பெரிய கட்சிகள் வரை மக்களை சந்தித்து வாக்கு சேகரித்து வருகின்றனர். இதனிடையே பாமகவில் தந்தைக்கும் மகனுக்கும் தலைமை போட்டி நாளுக்கு நாள் மிகப்பெரிய சண்டையாகவே மாறி உள்ளது. ராமதாஸ் தன்னுடைய பேரன் முகுந்தனுக்கு கட்சியின் இளைஞரணி தலைவர் பதவி வழங்கியதை அன்புமணி கடுமையாக எதிர்த்திருந்தார். இவர்கள் இருவரின் சண்டை பொது மேடைகளில் வெடித்தது.
இதனைத் தொடர்ந்து அன்புமணி ராமதாஸின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும், ராமதாஸ் அன்புமணியின் ஆதரவாளர்களை கட்சியிலிருந்து நீக்குவதும் என பல நிகழ்வுகள் தொடர்ந்து அரங்கேறிவிட்டது. இறுதியாக அன்புமணியை தலைவர் பதவியில் இருந்து ராமதாஸ் நீக்கினார். ஆனால் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் தீர்ப்பளிக்க ராமதாஸ் ஆத்திரமடைந்தார். இதனை எதிர்த்து டெல்லி உயர்நீதிமன்றத்தில் ராமதாஸ் தரப்பு வழக்கு தொடர்ந்து உள்ள நிலையில் பாமகவின் மாம்பழ சின்னமும் சமீபத்தில் முடக்கப்பட்டது. மேலும் அன்புமணி தான் தலைவர் என்று தேர்தல் ஆணையம் கூறியதை மறுக்க முடியாது என்றும் உயர்நீதிமன்றம் கூறியுள்ளது.
இந்நிலையில் சேலம் மேற்கு தொகுதி எம்எல்ஏவும் பாமக செய்தி தொடர்பாளருமான அருள் சேலத்தில் இன்று செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது, டெல்லி நீதிமன்ற தீர்ப்பு தொடர்பாக தவறான கருத்துக்கள் பரப்பப்படுவதாகவும் நீதி சாகவில்லை என்பதை நீதிமன்றம் உறுதிப்படுத்தி உள்ளதாகவும் அவர் கூறினார். மாம்பழம் சின்னம் பறிபோனது வேதனை அளிக்கிறது என்றும் வருகின்ற 2026 தேர்தலில் மீண்டும் மாம்பழம் சின்னத்தில் போட்டியிடுவோம் என்றும் தெரிவித்தார். அன்புமணியின் பதவிக்கால முடிந்து விட்டதாகவும் தேர்தல் கூட்டணி தொடர்பாக மற்ற கட்சிகள் பாமக உடன் மட்டுமே பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் என்றும் 10% வாக்குக்கு சொந்தக்காரர் ராமதாஸ் என்றும் அவர் கூறியுள்ளார்.
முன்னதாக புதுச்சேரியில் TVK சார்பில் கோரப்பட்ட பேரணிக்கு (roadshow) அனுமதி மறுக்கப்பட்டு, திறந்தவெளி பொதுக்கூட்டத்திற்கு மட்டுமே அனுமதி வழங்கப்பட்டது குறிப்பிடத்தக்கது.…
தமிழ் சினிமாவில் உச்ச நட்சத்திரமான விஜய் நடிப்பில் அடுத்து வெளியாக உள்ள படம் ஜனநாயகன். இந்த படம் வரும் பொங்கலுக்கு…
அஇஅதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமி அவர்கள், நகராட்சி நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல் துறையில் டெண்டர் ஒதுக்கீடுகளில் சுமார் ரூ.1,020…
விஜய் தந்தையுடன் காங்கிரஸ் பிரமுகர் திடீரென சந்திப்பு நடத்தியது தமிழக அரசியலில் புதிய புயலை கிளப்பியுள்ளது. தமிழகத்தில் 2026 ஆம்…
மத்திய அரசு கொண்டுவந்துள்ள புதிய விதிமுறைகளால் இண்டிகோ விமான சேவை ஏற்கனவே நாடு முழுவதும் கடந்த ஒரு வாரமாக பெரிதும்…
மலையேறும் பழக்கம் கொண்ட காதலனால் திட்டமிட்டு கிராஸ்க்லாக்னர் மலையில் கைவிடப்பட்டு பணியில் உறைந்து ஆஸ்திரேலிய பெண் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை…