சமூகத்தில் பலதரப்பட்ட மக்களுக்காக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு வகையான திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன. அதன்படி சிறுதொழில் செய்பவர்களுக்காகவும் தொழிலாளிகளாக இருப்பவர்களுக்காகவும் விஷ்வகர்மா என்ற திட்டத்தை மத்திய அரசு செயல்படுத்தி வருகிறது. பாரம்பரிய தொழில்கள் செய்வோருக்கு இந்த திட்டத்தின் கீழ் குறைந்த வட்டியில் அரசு சார்பில் கடன் வழங்கப்படுகிறது. முதலில் தொழிலாளர்களுக்கு வட்டியின்றி ரூ.1 லட்சம் வரை கடன் இத்திட்டத்தில் மூலம் கொடுக்கப்படுகிறது. இதனையடுத்து தொழில் சரியாக சென்றால், ரூ.2 லட்சம் வரை கடன் ஐந்து சதவீத வட்டியில் வழங்கப்படும். இந்த திட்டத்தின் வாயிலாக 18 வகையான பாரம்பரிய தொழில் செய்யும் கைவினை கலைஞர்கள் கடன் கொடுக்கப்பட்டு வருகிறது.
அதன்படி பொற்கொல்லர், குயவர், தச்சர், செருப்பு, கொத்தனார், நெசவாளர், பொம்மை செய்பவர் மற்றும் தையல்காரர் என மொத்தம் 18 வகையான தொழில்கள் இந்த திட்டத்தின் கீழ் அடங்கும். இந்த திட்டத்தில் தொழிலாளர்களுக்கு பயிற்சி வழங்கப்படுவதுடன் 500 ரூபாய் நிதி உதவியும் கிடைக்கும். இந்த திட்டத்தின் பலனை பெற ஆன்லைனில் www.pmvishwakarma.gov.in என்ற இணையதள பக்கத்தில் பதிவு செய்ய வேண்டும். மொபைல் நம்பர் மற்றும் ஆதார் உள்ளிட்ட விவரங்கள் அனைத்தையும் பூர்த்தி செய்த பிறகு படிவம் ஒன்று திறக்கும்.
இதில் அனைத்து தகவல்களையும் நிரப்பிய பிறகு ஆவணங்கள் அனைத்தும் சரிபார்க்கப்பட்ட பின்னர் விண்ணப்பம் ஏற்கப்படும். இதன் மூலம் நீங்கள் பயனடையலாம். இந்த திட்டத்திற்கு அருகில் உள்ள பொது சேவை மையத்திற்கு சென்றும் விண்ணப்பிக்கலாம். இந்தத் திட்டத்தின் மூலம் தொழில் பயிற்சி மற்றும் கருவிகள் வாங்க 15 ஆயிரம் ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்படும். மேலும் குறைந்தபட்டியில் மூன்று லட்சம் ரூபாய் வரை இரண்டு தவணைகளாக கடன் வழங்கப்படும்.