ஒரே நாளில் மிரண்ட சீனா… இந்திய கடற்படையில் சேர்ந்த 3 பிரம்மாண்ட “அதிநவீன எமன்கள்”…. கொல்கத்தாவில் உலகையே திரும்பிப் பார்க்க வைத்த பிரதமர் மோடி…!

Spread the love

இந்தியக் கடற்படையின் பலத்தை உலகளாவிய தரத்திற்கு உயர்த்தும் நோக்கில், ‘ஆத்மநிர்பர் பாரத்’ (சுயசார்பு இந்தியா) திட்டத்தின் கீழ் முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட 3 அதிநவீன போர்க்கப்பல்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று நாட்டுக்கு அர்ப்பணித்தார். மேற்கு வங்க மாநிலம் கொல்கத்தாவில் உள்ள சியாமா பிரசாத் முகர்ஜி துறைமுகத்தில் நடைபெற்ற பிரம்மாண்ட விழாவில், ஐஎன்எஸ் துனகிரி, ஐஎன்எஸ் அக்ராய் மற்றும் ஐஎன்எஸ் சன்ஷோதக் ஆகிய மூன்று கப்பல்களும் இந்திய கடற்படையில் அதிகாரப்பூர்வமாக இணைக்கப்பட்டன. கொல்கத்தாவைச் சேர்ந்த பொதுத்துறை நிறுவனமான கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் அண்ட் இன்ஜினீயர்ஸ் மற்றும் இந்தியக் கடற்படையின் போர்க்கப்பல் வடிவமைப்புப் பணியகம் இணைந்து இந்த சாதனையை நிகழ்த்தியுள்ளன.

இந்த மூன்று அதிநவீன கப்பல்களிலும் பயன்படுத்தப்பட்டுள்ள 75 சதவீதத்திற்கும் அதிகமான பொருட்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்யப்பட்டவை என்பது குறிப்பிடத்தக்கது. ஒரே நேரத்தில் மூன்று நவீன போர்க்கப்பல்கள் இந்தியக் கடற்படையில் இணைக்கப்பட்டிருப்பது நம் நாட்டின் கடல்சார் பாதுகாப்புக்குக் கூடுதல் வலிமையையும், புதிய மைல்கல்லையும் தேடித்தந்துள்ளது. மத்திய அரசு நாட்டின் பாதுகாப்பை பலப்படுத்த எடுத்து வரும் தொடர் முயற்சிகளுக்குச் சான்றாக இந்த நிகழ்வு அமைந்துள்ளது.

இவற்றில், ஐஎன்எஸ் துனகிரி என்பது ‘புராஜெக்ட் 17 ஏ’ திட்டத்தின் கீழ் உருவாக்கப்பட்ட 5-வது அட்வான்ஸ்ட் ஸ்டெல்த் ரக போர்க்கப்பலாகும். எதிரிகளின் ரேடார் கண்களில் சிக்காமல் தப்பித்து, துல்லியமாகத் தாக்குதல் நடத்தும் தனித்துவமான வடிவமைப்பு இதனுடைய சிறப்பம்சமாகும். இக்கப்பலில் பிரமோஸ் சூப்பர்சோனிக் ஏவுகணைகள் மற்றும் நடுத்தர தூர வான் பாதுகாப்பு ஏவுகணைகள் பொருத்தப்பட்டுள்ளதால், எதிரிகளின் இலக்குகளை மிகத் துல்லியமாகக் குறிவைத்து அழிக்க முடியும்.

அடுத்ததாக, கடலுக்கடியில் இருக்கும் அச்சுறுத்தல்களை முறியடிப்பதற்காக ஐஎன்எஸ் அக்ராய் கப்பல் வடிவமைக்கப்பட்டுள்ளது. இது ஆழமற்ற கடற்பகுதியில் பயணிக்கும் ‘அர்னாலா கிளாஸ்’ நீர்மூழ்கி எதிர்ப்புப் போர்க்கப்பலாகும். இதில் அதிநவீன சோனார் அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள் மற்றும் ராக்கெட் லாஞ்சர்கள் பொருத்தப்பட்டுள்ளதால், எதிரி நாட்டு நீர்மூழ்கிக் கப்பல்களை எளிதில் கண்டறிந்து துவம்சம் செய்யும். இறுதியாக, ஐஎன்எஸ் சன்ஷோதக் என்பது கடலாய்வுப் பணிகளுக்காக உருவாக்கப்பட்ட 4-வது பெரிய ஆய்வு கப்பலாகும் . ஆழ் கடல் மற்றும் கடலோரப் பகுதிகளில் துல்லியமாக வரைபடம் தயாரிக்க உதவும் இக்கப்பலில், மேம்பட்ட ஏயூவி (AUV) மற்றும் ஆர்ஓவி (ROV) போன்ற நவீன ஆய்வு அமைப்புகள் இடம்பெற்றுள்ளன.

Nanthini

Recent Posts

“பனையேறியது ரகசிய ரிப்போர்ட்”….. 6 மாத ஆட்சியில் முதல்வர் விஜய் எடுத்த அதிரடி முடிவு… கலக்கத்தில் முக்கிய அமைச்சர்கள்….!

தமிழக அரசியலில் மாபெரும் திருப்பமாக, நடிகர் விஜய்யின் 'தமிழக வெற்றிக் கழகம்' 2026 சட்டசபை தேர்தலில் தனித்து களமிறங்கி அமோக…

1 minute ago

“அதிமுக – தவெக ரகசிய ஆப்பரேஷன்”…. மாஜிக்களை தூக்க போட்ட திட்டம் எடப்பாடிக்கு ஷாக் கொடுத்த சீனியர்கள்…. அலறும் அரசியல் களம்….!

அதிமுகவிலிருந்து விலகி, விஜய் தலைமையிலான தமிழக வெற்றிக் கழகத்தில் இணைந்து முக்கியப் பொறுப்புகளை வகித்து வரும் முன்னாள் சீனியர் தலைவர்கள்…

10 minutes ago

“என் தொழில் இவனோட முடியனும்”…. சாமி பீடத்தில் 10 வயது மகனை பலிகொடுத்த பூசாரி தந்தை… அதிர்ச்சி காரணம்…. திடுக்கிடும் சம்பவம்….!

குஜராத் மாநிலம் சனாந்த் அருகே உள்ள வின்சியா கிராமத்தில் நடந்த கொடூர சம்பவம் ஒன்று ஒட்டுமொத்த தேசத்தையும் உரைய வைத்துள்ளது.…

19 minutes ago

3-வது உலகப்போர் தொடக்கம்?…. ஈரான் வெளியிட்ட 8 நிமிட ‘அணுஅடைக்கல’ வீடியோ…. உலகை உலுக்கும் டிரம்ப் முடிவு…. அமெரிக்கா வீசப்போகும் அணு குண்டு….!

இஸ்ரேல் மற்றும் அமெரிக்காவின் சாத்தியமான தாக்குதல்களுக்கு இடையே, ஈரான் தனது நாட்டு மக்களுக்கு அணுஆயுதத் தாக்குதலில் இருந்து தப்பிப்பது குறித்த…

25 minutes ago

அதிர்ச்சி…. உளுந்தூர்பேட்டை புறவழிச்சாலையில் அதிகாலையில் நடந்த கொடூரம்…. 20 அடி பள்ளத்தில் பாய்ந்த லாரி…. பதறவைக்கும் காட்சிகள்…!

சிவகாசியில் இருந்து வீட்டு உபயோகப் பொருட்களை ஏற்றிக் கொண்டு சென்னை நோக்கிச் சென்று கொண்டிருந்த மினி லாரி ஒன்று, கள்ளக்குறிச்சி…

30 minutes ago

“உடனே திரும்பி வாடி”…. 22 நாளா ஆளையே காணல…. மருத்துவமனையில் கதறும் மகள்…. பவானியில் நடந்த உருக்கமான சம்பவம்….!

குடும்பத்தில் ஏற்படும் சிறிய அளவிலான மனக்கசப்புகளும், சில நேரங்களில் எதிர்பாராத மிகப்பெரிய சோகங்களில் கொண்டு போய் முடிந்துவிடுகின்றன. ஈரோடு மாவட்டம்…

37 minutes ago