நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது.
இந்த திட்டத்தின் கீழ் இதுவரை மொத்தம் 20 தவணைகள் விடுவிக்கப்பட்டுள்ள நிலையில் 21 ஆவது தவணை எப்போது வெளியிடப்படும் என்று நாடு முழுவதுமுள்ள விவசாயிகளின் ஒரே எதிர்பார்ப்பாக உள்ள நிலையில் 21-வது தவணைத் தொகையை நாளை (நவ.19) பிரதமர் மோடி விடுவிக்க உள்ளார். கோவையில் நடைபெறும் விழாவில் நாளை பங்கேற்கும் மோடி, இதற்கான அறிவிப்பை வெளியிட உள்ளார். KYC அப்டேட் செய்யாததால், கடந்த தவணையை பெறத் தவறியவர்களுக்கு இந்த முறை 2 தவணைத் தொகையை (₹4,000) சேர்த்து வழங்கவும் ஏற்பாடு செய்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
