விவசாயிகளே குட் நியூஸ்..! தீபாவளி பரிசாக ரூ.2000..? மத்திய அரசு வெளியிட்ட புதிய தகவல்..!!

By Soundarya on புரட்டாதி 12, 2025

Spread the love

நாடு முழுவதும் விவசாயிகளுக்கு பிஎம் கிசான் திட்டத்தின் கீழ் அரசு சார்பில் ஒவ்வொரு வருடமும் 6000 ரூபாய் நிதி உதவி வழங்கப்பட்டு வருகிறது. நாட்டிலுள்ள நலிந்த விவசாயிகளுக்கு உதவுவதற்காக மத்திய மோடி அரசின் பி எம் கிஷான் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தில் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுதோறும் 6000 ரூபாய் நிதி உதவி மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இந்த தொகை விவசாயிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாக வரவு வைக்கப்படுகிறது. இதுவரை 20 தவணை வழங்கப்பட்டுவிட்டது.

இந்நிலையில் தீபாவளி பரிசாக 21-வது தவணை தொகையை விரைவில் வழங்க மத்திய அரசு திட்டமிட்டு வருகிறது.  அதாவது  வடமாநில வெள்ள பாதிப்பு கருதி தீபாவளி பண்டிகைக்கு முன்பாக (அக்டோபர்) அடுத்த தவணை வரவு வைக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.