காலையிலேயே குட் நியூஸ்..! விவசாயிகளுக்கு ரூ.2,000 PM கிஷான் நிதியுதவி எப்போது..? வெளியான முக்கிய தகவல்..!!

By Soundarya on தை 16, 2026

Spread the love
விவசாயிகளுக்கான பிரதமர் கிசான் திட்டத்தின் 22-வது தவணைத் தொகை, 2026 ஆம் ஆண்டு பிப்ரவரி மற்றும் மார்ச் மாதங்களுக்கு இடையில் பயனாளிகளின் வங்கிக் கணக்கில் நேரடியாகச் செலுத்தப்படலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இத்திட்டத்தின் கீழ் தகுதியுள்ள விவசாயிகளுக்கு ஆண்டுக்கு மொத்தம் 6,000 ரூபாய், நான்கு மாதங்களுக்கு ஒருமுறை 2,000 ரூபாய் வீதம் மூன்று தவணைகளாக வழங்கப்படுகிறது. இதுவரை அரசு 21 தவணைகளை வெற்றிகரமாக வெளியிட்டுள்ள நிலையில், அடுத்த தவணைக்கான அதிகாரப்பூர்வ தேதியை மத்திய அரசு இன்னும் அறிவிக்கவில்லை.
முன்னதாக, 21-வது தவணைத் தொகையை 2025 நவம்பர் 19 அன்று தமிழ்நாட்டின் கோயம்புத்தூரில் நடைபெற்ற விழாவில் அரசு வெளியிட்டது. அடுத்த தவணையைப் பெறுவதற்கு விவசாயிகள் தங்கள் PM-Kisan இணையதளத்தில் இ-கேஒய்சி (e-KYC) நடைமுறையை முடித்திருப்பது அவசியமாகும். நில ஆவணங்களைச் சரிபார்ப்பது மற்றும் வங்கி கணக்குடன் ஆதார் எண்ணை இணைப்பது போன்ற பணிகளை முறையாகச் செய்துள்ள விவசாயிகள் மட்டுமே இந்த 2,000 ரூபாய் நிதியுதவியைப் பெற முடியும்.